Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குச் சந்தைகள் சரிந்தது...! கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்...!

 

 
இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று கணிசமான இறக்கம் கண்டன. சென்செக்ஸ் 444 புள்ளிகளை இழந்தது. நிஃப்டி 150 புள்ளிகளையும் இழந்தது. கடந்த ஜூன் மாதம் 24-க்குப் பிறகு ஏற்பட்ட பெரிய சரிவு இது. சந்தை சரிந்த இந்த நிலையில், கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள் இனி...!
1. அமெரிக்க வட்டி உயர்வு எதிர்பார்ப்பு!
அமெரிக்க ஃபெட் வருகிற 21-ஆம் தேதி கூடவிருக்கிறது. இந்தக் கூட்டத்தின்போது அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்கிற எதிர்பார்ப்பு இப்போது திடீரென அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவில் தற்போது .50% என்கிற அளவில் வட்டி விகிதம் இருக்கிறது. இது 0.75% சதவிகிதமாக உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
2.  தப்பிப் பிழைத்த 5 பங்குகள்!
இந்தியப் பங்குச் சந்தைகள் கணிசமாக சரிந்த நிலையிலும் ஐந்து பங்குகளின் விலை இறங்காமல், பாசிட்டிவ்-ஆக வர்த்தகம் ஆயின. இன்ஃபோசிஸ் 1.79 சதவிகிதமும், டெக் மகேந்திரா 1.21 சதவிகிதமும், ஹெச்சிஎல் டெக் 0.28 சதவிகிதமும், டிசிஎஸ் 0.28 சதவிகிதமும் ரிலையன்ஸ் 0.19 சதவிகிதமும் ஏற்றம் கண்டுள்ளன.
3. வங்கிப் பங்குகள் விலை குறைந்தன!
பங்குச் சந்தைகள் கணிசமாக இறக்கம் கண்டதினால், செக்டோரல் இன்டெக்ஸ்களும் கணிசமான இறக்கத்தைக் கண்டன. நிஃப்டி பிஎஸ்யூ பேங்க் இன்டெக் 4.74% இறக்கம் கண்டன. நிஃப்டி மெட்டல் 4.66% இறக்கம் கண்டன.
நிஃப்டி இன்ஃப்ரா 3.66 சதவிகிதமும் நிஃப்டி மிட் 100 3.07 சதவிகிதமும் இறக்கம் கண்டன. நிஃப்டி ஆட்டோ, நிஃப்டி பேங்க் முறையே 2.77%, 2.25% இறக்கம் கண்டன. 
நிஃப்டி எப்ஃஎம்சிஜி 1.82%,நிஃப்டி பார்மா 1.66%, நிஃப்டி எனர்ஜி 1.59% இறக்கம் கண்டன.
4. சென்செக்ஸ் இழந்த 3 லட்சம் கோடி!
சென்செக்ஸ் கடந்த இரு தினங்களாக இறக்கம் கண்டதன் விளைவாக அதில் பட்டியல் இடப்பட்டு இருக்கும் பங்குகளின் சந்தை மதிப்பு ஏறக்குறைய 3 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
5.   ரூபாய் மதிப்பும் சரிந்தது!
வெளிநாட்டு முதலீட்டாளர் இன்று கணிசமான அளவில் பங்குகளை விற்று வெளியேறியதால், டாலரின் தேவை அதிகரித்தது. இதனால் ரூபாய் மதிப்பு சரிந்தது. இன்றைய தினத்தில் வர்த்தகம் தொடங்கியபோது 66.68-ஆக இருந்தது. இன்று ஒரு நாளில் மட்டும் 24 காசுகள் குறைந்து 66.92-ஆக குறைந்தது! 
அடுத்து வரும் நாட்களில் ரூபாயின் மதிப்பு 67-யை நோக்கி உயரும்போது அதனால் பொருளாதாரத்தில் பல விதமான பாதிப்புகள் உண்டாகும் என்பதை மறுப்பதற்கில்லை.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ