Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆசிய சந்தைகள் இறக்கத்தால் இந்திய சந்தைகள் சரிவு!

 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (14.09.16) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. 
 
பக்ரீத் பண்டிகையொட்டி இந்திய பங்குச் சந்தைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்றைய காலை நேர வர்த்தக தொடக்கத்தின்போது பங்குச் சந்தை ப்ளாட் ஆக வர்த்தகமானது. இந்த நிலையில் ஆசிய சந்தைகௐள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருவதினால் இந்திய சந்தைகளும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. 
 
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 89.34 புள்ளிகள் குறைந்து 28,264.76 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 24.00 புள்ளிகள் குறைந்து 8,691.15 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
என்டிபிசி 156.00 2.06%
பேங்க் ஆப் பரோடா 164.80 1.89%
யெஸ் பேங்க் 1,221.55 1.37%
டெக் மஹிந்திரா 469.15 1.14%
அதானி துறைமுகங்கள் 262.60 1.00%
 
விலை குறைந்த பங்குகள்
 
டாடா ஸ்டீல் 364.90 -2.25%
கோல் இந்தியா 323.10 -2.22%
டிசிஎஸ் 2,319.20 -1.69%
ஓஎன்ஜிசி 246.80 -1.67%
ஹெச்டிஎப்சி 1,379.95 -1.37%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ