Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரண்டாவது நாளாக இந்திய சந்தை ப்ளாட்!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (15.09.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது. 
 
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தைகள் ப்ளாட் ஆக வர்த்தகத்தை தொடங்கியது. ஆனால், அதன்பின் கச்சா எண்ணெய் விலை சரிவால் அமெரிக்க பங்குச் சந்தை நேற்றைய வர்த்தகத்தில் இறக்கத்தில் முடிவடைந்தாலும், ஆசிய சந்தைகள் பலவீனமான நிலையில் வர்த்தகமாகி வருவதினாலும் இந்திய பங்குச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வந்தன. 
 
இந்த நிலையில் இந்திய பங்குச் சந்தைகள் இரண்டாவது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது. அடுத்த வாரம் நடைபெற உள்ள அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு வரும் என்று முதலீட்டாளர்கள் உஷாராக வர்த்தகம் மேற்கொண்டு வருவதால் சந்தை ப்ளாட் ஆக நிறைவடைந்துள்ளது. 
 
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 40.66 புள்ளிகள் உயர்ந்து 28,412.89 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 15.95 புள்ளிகள் குறைந்து 8,742.55 என்ற நிலையில் வர்த்தகமானது.
 
விலை அதிகரித்த பங்குகள்
பி.எச்.இ.எல் 150.30 2.70
ஜீ மகிழ்விக்க 530.85 2.45
ரிலையன்ஸ் 1,065.00 1.94
மாருதி சுசூகி 5,452.40 1.65
ஐடிசி 255.90 1.61
 
விலை குறைந்த பங்குகள்
 
யெஸ் பேங்க் 1,221.80 -2.53%
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 174.80 -2.43%
ஆக்சிஸ் வங்கி 588.75 -2.17%
டாடா ஸ்டீல் 366.40 -2.01%
ஹீரோ மோட்டோகார்ப் 3,523.45 -1.86%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ