Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வால் ஸ்ட்ரீட் அதிகரிப்பால், சென்செக்ஸ் ட்ரிபிள் செஞ்சூரி!

காலை 10.10 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (16.09.16) காலை நேர வர்த்தகத்தில் அதிக ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
அடுத்த வாரம் நடைபெற உள்ள அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு வரும் என்று முதலீட்டாளர்கள் உஷாராக வர்த்தகம் மேற்கொண்டதால் நேற்றைய இந்திய பங்குச் சந்தைகள் ப்ளாட் ஆக முடிவடைந்தன.
 
ஆசிய சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகம் மேற்கொண்டு வருவதினாலும், நேற்றைய வர்த்தக நேரத்தின் முடிவில் அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்த காரணத்தினாலும் இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய காலை நேர வர்த்தகத்தில் அதிக ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. 
 
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 313.57 புள்ளிகள் உயர்ந்து 28,726.88 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 91.70 புள்ளிகள் உயர்ந்து 8,834.40 என்ற நிலையில் வர்த்தகமானது.
 
விலை அதிகரித்த பங்குகள்
பஜாஜ் ஆட்டோ 3,024.45 3.16%
ஹீரோ மோட்டோகார்ப் 3,627.25 2.95%
கெயில் 395.00 2.48%
ஆக்சிஸ் வங்கி 602.60 2.35%
மாருதி சுசூகி 5,574.20 2.23%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஹெச்டிஎப்சி 1,406.20 -0.27%
டிசிஎஸ் 2,323.65 -0.14%
லூபின் 1,545.25 -0.09%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ