Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐசிஐசிஐ புரூ. லைஃப் இன்ஷூரன்ஸ் ஐபிஓ செப்டம்பர் 19 -ல் தொடக்கம்

இந்தியாவில் முதல்முறையாக பங்குச் சந்தையில் களமிறங்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனம் என்கிற பெருமையுடனும் பெரிய எதிர்பார்ப்புடனும் ஐபிஓ வந்திருக்கிறது ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி. கடந்த ஜூலை 18-ம் தேதி செபியிடம் புதிய பங்குகளை வெளியிட (ஐபிஓ) முறையில் விற்க அனுமதி கேட்டிருந்தது இந்த நிறுவனம். அதற்கு செபி இந்த மாதம் அனுமதி அளிக்க, சுறுசுறுப்பாகக் களமிறங்கி இருக்கிறது இந்த நிறுவனம்.   
 
இடமிருந்து வலம்
சென்னையில் நடந்த ஐபிஓ அறிவிப்பு கூட்டத்தில் குனல் ஜெயின் (ஜேஎம் ஃபைனான்ஸியல் இன்ஸ்டிடியூசனல் செக்யூரிட்டீஸ்), திரன் ஜெயின் (மூத்த துணை தலைவர், ஐசிஐசிஐ புரூ. லைஃ இன்ஷூரன்ஸ்), சத்யன் ஜம்புநாதன் (சிஎஃப்ஓ,  ஐசிஐசிஐ புரூ. லைஃ இன்ஷூரன்ஸ்), டி. தினாய் (துணை தலைவர், ஐசிஐசிஐ புரூ. லைஃ இன்ஷூரன்ஸ்), பிரிதிஷ் கன்டோய் (ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ்)  
 
 
ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரை, ஐசிஐசிஐ பேங்க் 67.52 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறது. புரூடென்ஷியல் நிறுவனம் 25.83% பங்குகளை வைத்திருக்கிறது. விப்ரோ நிறுவனத்தின் சேர்மன் அஸிம் பிரேம்ஜியும் (சுமார் 4%) இந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்.
 
இந்த மாதம் செப்டம்பர் 19-ம் தேதி, திங்கள்கிழமை தொடங்கி செப்டம்பர் 21-ஆம் தேதி வரை ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் பங்குகள் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.10 முக மதிப்பு கொண்ட பங்கின் விலைப் பட்டை ரூ.300 முதல் ரூ.334-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் புதிய பங்கு வெளியீட்டில் 12.63 சதவிகித பங்குகள் (சுமார் 18.13 கோடி) விற்பனை செய்யப்படுகிறது. இதில் 19 சதவிகித பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில் பொது மக்களுக்கு 25 சதவிகித பங்குகள் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 
 
குறைந்தபட்சம் 44 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு 44-ன் மடங்குகளில் விண்ணப்பிக்க வேண்டும். பங்கு விற்பனைக்குப் பிறகு ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் பங்கு மூலதனம் 54.89 சதவிகிதமாகக் குறைந்துவிடும். புரூடென்ஷியல் நிறுவனத்தின் பங்கு மூலதனத்தில் எந்த மாற்றமும் இருக்காது. மொத்தம் ரூ.6,000 கோடி திரட்டப்படுகிறது. ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனம் பங்கு வெளியீட்டின் மூலம் இவ்வளவு பெரிய தொகையை திரட்டுவது இதுவே முதல் முறை. கோல் இந்தியா ஐபிஓவுக்குப் பிறகு, ஐபிஓ மூலம் இவ்வளவு பெரிய தொகை திரட்டப்படுவது இதுவே முதல் முறை ஆகும். 
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 2.5 முதல்-2.8% பேர் மட்டுமே ஆயுள் காப்பீடு எடுத்திருக்கிறார்கள். இந்தியா போன்ற பெரிய நாட்டில் இந்த சதவிகிதம் வரும் ஆண்டுகளில் அபரிமிதமாக அதிகரிக்கும். 
 
சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆயுள் காப்பீடை பொறுத்தவரை எல்.ஐ.சி மட்டும்தான் அதிக வாடிக்கையாளர்களை கொண்டிருந்தது. காப்பீடு எடுத்தவர்களில் 92% எல்ஐசியிடம் இருந்தனர். எல்ஐசிக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறையவில்லை என்றாலும், தனியாரோடு ஒப்பிடும்போது சற்று குறைவான வளர்ச்சியே கண்டிருக்கிறது.  தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஐசிஐசிஐ புரு. லைஃப்தான் முன்னிலையில் இருக்கிறது. இதன் சந்தை பங்களிப்பு 11.3 சதவிகிதமாக  உள்ளது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ