Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாரத்தின் இறுதிநாள் சென்செக்ஸ் சரவெடி!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (16.09.16) மாலை நேர வர்த்தகத்தில் அதிக ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது. 
 
நேற்றைய வர்த்தக நேரத்தின் முடிவில் அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்த காரணத்தினாலும், ஆசிய சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகம் மேற்கொண்டு வந்ததினாலும், இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய காலை நேர வர்த்தகத்தில் அதிக ஏற்றத்துடன் 300 புள்ளிகளுக்கு மேல வர்த்தகமாகி வந்தன. 
 
இந்த நிலையில் மதியத்திற்கு பிந்தைய வர்த்தகத்தில் ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகம் ஆன காரணத்தினாலும், முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை விற்பனை செய்த காரணத்தினாலும் சென்செக்ஸ் கொஞ்சம் சரிந்து 180 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. 
 
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 186.14 புள்ளிகள் உயர்ந்து 28,599.03 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 37.30 புள்ளிகள் உயர்ந்து 8,779.85 என்ற நிலையில் வர்த்தகமானது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
எய்கர் மோட்டார்ஸின் 23,135.25 3.10%
கிராஸிம் 4,853.35 2.65%
ஆக்சிஸ் வங்கி 602.20 2.28%
மாருதி சுசூகி 5,573.30 2.22%
பார்தி இன்ப்ராடெல் 351.55 1.97%
 
விலை குறைந்த பங்குகள்
 
யெஸ் பேங்க் 1,169.80 -4.26%
பி.எச்.இ.எல் 146.65 -2.43%
ஜீ மகிழ்விக்க 519.45 -2.15%
டாடா ஸ்டீல் 358.85 -2.065
ஹிண்டால்கோ 142.65 -1.99%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ