Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி!

 
இந்த வாரம் சீரகம், தனியா மற்றும் மஞ்சள் எப்படி வர்த்தகமாகும் என்பது குறித்து இந்தியா நிவேஷ் கமாடிட்டீஸ் நிறுவனத்தின் இயக்குனர் மனோஜ் குமார் ஜெயின் கூறுகிறார். 
 
சீரகம்! 
 
என்சிடிஇஎக்ஸ் சந்தையில் சீரகத்தின் விலை தற்போதைய நிலையில் இருந்து மீண்டும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
சீரகத்தின் விலையைப் பொறுத்தவரை, ஏற்கனவே சமீபத்தில் அதிகளவில் அதிகரித்து இருந்த 20,350 என்ற லெவலில் இருந்து 38.2% வரை கரெக்‌ஷன் ஆகிவிட்டது.
 
ஃபன்டமென்டல் மற்றும் டெக்னிக்கல்படி, தற்போதைய நிலையில் இருந்து சீரகத்தின் விலை அதிகரிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
 
சீரகத்தின் விலை 17,200 மற்றும் 16,600 என்ற நிலையில் நல்ல சப்போர்ட்டில் இருக்கிறது. சீரகத்தின் விலை 16,600-யை உடைத்தெறியாதபட்சத்தில் 18,800, 19,300 மற்றும் 20,350 வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
தற்போதைய நிலையில், சீரகத்தைக் கிட்டத்தட்ட 17,600 முதல் 17,200-க்குள் வாங்கிக் கொள்ளலாம். ஸ்டாப்லாஸ் 16,600-க்கு கீழ் வைத்துக் கொள்ளவும். டார்க்கெட் 18,800, 19,300 மற்றும் 20,350. 
 
தனியா! 
 
என்சிடிஇஎக்ஸ் சந்தையில் தனியா 7,300 என்ற நிலையில் நல்ல சப்போர்டிலும், 8,000-ம் ரெசிஸ்டன்ஸ் லெவலிலும் வர்த்தகமாகி வருகிறது.
 
 
வீக்லி சார்டில் 8,000-க்கு மேலே தனியா க்ளோஸ் ஆகும்பட்சத்தில் மட்டும் இதன் விலை 8,300, 8,450 மற்றும் 8,700 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இல்லையெனில் மீண்டும் 7,300 என்ற சப்போர்ட் நிலையைத் தொடும் என்று எதிர்பார்க்கலாம்.
 
தனியா விலை 7,300-க்குக் கீழே க்ளோஸ் ஆனால் மட்டும் மேலும் இதன் விலை கடுமையாக சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
தனியாவைப் பொறுத்தவரை, தற்போதைக்கு கிட்டத்தட்ட 7,800-க்கு விற்கலாம். ஸ்டாப் லாஸ் 8,000-ம் ஆக வைத்துக் கொள்ளவும். டார்க்கெட் 7,300. 
 
 
 
மஞ்சள்! 
 
என்சிடிஇஎக்ஸ் சந்தையில் மஞ்சள் 6,600 என்ற சப்போர்ட்டிலும், 7,400 என்ற ரெசிஸ்டன்ஸ் லெவலிலும் வர்த்தகமாகி வருகிறது.
 
மஞ்சளைப் பொறுத்தவரை, சார்ட்டில் இதன் விலை பாசிட்டிவ்-ஆகவே வர்த்தகமாகி வருகிறது, ரெசிஸ்டன்ஸ் லெவல் 7,400-யைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீக்லி சார்டில் 7,400-யை உடைத்தெறியும்பட்சத்தில் மேலும் இதன் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையெனில் மீண்டும் மஞ்சள் விலை 6,600-யைத் தொடும் என்று எதிர்பார்க்கலாம்.
 
சோ.கார்த்திகேயன்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ