Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோ எண்ணிக்கை அதிகரிப்பு..!

 
மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோ எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை உணர்வு அதிகரித்து வருவதே இதற்கு காரணம். 
 
மேலும் பங்குச் சந்தையும் அதற்கேற்ப தொடர்ந்து பாசிட்டிவாக இருந்து வருகிறது. 
ஜிஎஸ்டி மசோதா, பருவ மழை எதிர்பார்ப்பு போன்ற சாதகமான செய்திகள் சந்தைக்கு சாதகமாக உள்ளன. 
 
ஆகஸ்ட் 2016 நிலவரப்படி மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோக்களின் எண்ணிக்கை 5 கோடியை எட்டியுள்ளது. 2014-15 நிதி ஆண்டில் 22 லட்சம் ஃபோலியோகள் தொடங்கப்பட்டிருந்தன. ஆனால் 2015-16 நிதி ஆண்டில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்து 59 லட்சம் ஃபோலியோக்கள் தொடங்கப்பட்டன. 
 
மேலும் மாதாந்திர முதலீட்டு திட்டங்களான எஸ்ஐபி கணக்குகள் 1 கோடியைத் தாண்டியுள்ளது. எஸ்ஐபி மூலம் மட்டுமே மாதம் ரூ. 3000 கோடி முதலீடு செய்யப்படுகிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ