Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நான்காவது நாளாக சென்செக்ஸ் அதிகரிப்பு!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (19.09.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 72 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த மூன்று நாள் வர்த்தகத்தில் குறியீடு 245.49 புள்ளிகளாக அதிகரித்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 72.03 புள்ளிகள் உயர்ந்து 28,671.06 புள்ளிகளாக இருந்தது. 
 
எண்ணெய் மற்றும் எரிவாயு, பொதுத்துறை நிறுவனம், வங்கி, நுகர்வோர் சாதனங்கள், ரியல் எஸ்டேட்,
சுகாதார மற்றும் எப்எம்சிஜி போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்து காணப்பட்டன. 
 
ஜப்பானின் நிதிச்சந்தைக்கு இன்று தேசிய விடுமுறை. எனினும் ஜப்பான் மத்திய வங்கி நாளை வட்டி விகிதம் குறித்த அறிவிப்பினை வெளியிட உள்ளதால் முதலிட்டாளர்கௐள் உஷாராக வர்த்தகம் மேற்கொண்டனர். வர்த்தகத்தின் இடையே ஆசிய சந்தைகள் அதிகரித்து காணப்பட்டதால் இந்திய சந்தைகள் நான்காவது நாளாக இன்றும் அதிகரித்து முடிவடைந்தது.
 
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 35.47 உயர்ந்து 28,634.50 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 28.55 புள்ளிகள் உயர்ந்து 8,808.40 என்ற நிலையில் வர்த்தகமானது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
இன்டஸ் இன்ட் வங்கி 1,205.10 3.03%
அரவிந்தர் ஃபார்ம் 804.85 2.51%
டிசிஎஸ் 2,411.45 2.11%
டாடா பவர் 76.85 1.86%
அதானி துறைமுகங்கள் 276.15 1.84%
 
விலை குறைந்த பங்குகள்
 
மாருதி சுசூகி 5,491.90 -1.46%
ஆக்சிஸ் வங்கி 594.35 -1.30%
பஜாஜ் ஆட்டோ 2,945.85 -1.20%
பார்தி இன்ப்ராடெல் 34875 -0.80%
ஹீரோ மோட்டோகார்ப் 3,564.05 -0.69%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ