Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக மின்சாரத் துறை நஷ்டமடையக் காரணம் என்ன?

அரசு நிறுவனங்களின் மோசமான செயல்பாட்டினால் தமிழக அரசாங்கம் தினமும் சராசரியாக 40 கோடி ரூபாய் இழந்து வருவதாக சமீபத்தில் அதிர்ச்சிகரமான செய்தி வெளியானது. மத்திய அரசின் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் இந்த அதிர்ச்சி தரும் உண்மை எடுத்துச் சொல்லப்பட்டு இருந்தது.
 
 
அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் நிறுவனங்களில் முதலிடத்தைப் பெற்றிருக்கின்றன தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமும் (Tangedco) தமிழ்நாடு மின் தொடர்மைப்புக் கழகமும் (Tantransco). இந்த இரு நிறுவனங்கள் மூலமாக தமிழக அரசுக்கு ஏற்பட்ட திரண்ட இழப்பு (Accumulated Losses)  மொத்தம் ரூ.54,952 கோடி ரூபாய். 
 
இவ்வளவு பெரிய இழப்பு என்ன காரணம்?
 
சரியான நிர்வாகமின்மை, வெளிச் சந்தையில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியது போன்ற காரணங்கள் ஒருபக்கம் இருந்தாலும், மின் திருட்டு முக்கியமான காரணம் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகள் மட்டுமல்ல, சிறிய கட்சிகள்கூட கூட்டம் நடத்தும்போது பயன்படுத்தும் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசுக்குச் செலுத்துவதில்லை.
 
மூலப் பொருட்கள் வாங்குவதில் தொடங்கி, பல்வேறு வேலைக்கான கான்ட்ராக்ட் அளிப்பது வரை லஞ்சம் தலைவரித்தாடுவதால் மின்சாரத் துறையில் நஷ்டம் என்பது தவிர்க்க முடியாத விஷயமாக இருக்கிறது.
 
இந்த நிலையில், மின்வாரியத் துறை இவ்வளவு பெரிய நஷ்டம் அடைந்ததற்கு என்ன காரணம் என்று நாணயம் விகடன்  டிவிட்டரில்  ஒரு சர்வே நடத்தினோம். அந்த சர்வே முடிவு இதோ 
 
சரியான நிர்வாகமின்மை - 43%
 
ஊழல் - 50%
 
மின் திருட்டு - 7%
 
மின் வாரியத்தில் ஊழலை ஒழித்து, சரியான நிர்வாகத்தை கொண்டுவந்துவிட்டால் லாபப் பாதைக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள் மக்கள்! மக்கள் நினைத்தால் சரியாகத்தானே இருக்கும்!

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ