Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐடி, வங்கிப் பங்குகள் சரிவால் சந்தை சரிவு!

காலை 10.00 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (20.09.16) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. 
 
நேற்றைய வர்த்தகத்தின் இடையே ஆசிய சந்தைகள் அதிகரித்து காணப்பட்டதால் இந்திய சந்தைகள் நான்காவது நாளாக அதிகரித்து முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று ஜப்பான் மத்திய வங்கி வட்டி விகிதம் குறித்த அறிவிப்பினை வெளியிட உள்ளதாலும், நாளை அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகித குறித்த அறிவிப்பினை வெளியிட உள்ள காரணத்தினாலும் முதலிட்டாளர்கள் கவனத்துடன் வர்த்தகம் மேற்கொண்டு வருவதாலும், ஐடி மற்றும் வங்கிப் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகம் ஆகி வருவதாலும் இந்திய பங்குச் சந்தை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. 
 
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 76.98 குறைந்து 28,558.68 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 27.20 புள்ளிகள் குறைந்து 8,781.75 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஓஎன்ஜிசி 257.20 1.20%
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் 3,193.95 1.16%
சிப்லா 604.40 1.10%
அரவிந்தர் ஃபார்ம் 811.50 0.83%
மாருதி சுசூகி 5,527.70 0.65%
 
விலை குறைந்த பங்குகள்
 
அதானி துறைமுகங்கள் 271.85 -1.56%
ஹீரோ மோட்டோகார்ப் 3,513.00 -1.43%
கோடக் மகேந்திரா 792.20 -1.33%
பார்தி ஏர்டெல் 321.10 -0.94%
இன்போசிஸ் 1,051.85 -0.88%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ