Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜப்பான், அமெரிக்கா கூட்டம் - வர்த்தகர்கள் உஷார்!

காலை 10.25 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (21.09.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. 
 
இன்று ஜப்பான் மத்திய வங்கி வட்டி விகிதம் குறித்த அறிவிப்பினை வெளியிட உள்ளதாலும், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகித குறித்த அறிவிப்பினை வெளியிட உள்ள காரணத்தினாலும் முதலிட்டாளர்கள் கவனத்துடன் வர்த்தகம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று நடைபெறும் அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்தில் அதன் தலைவர் ஜெனேட் யெல்லேன் 90 சதவிகிதம் வட்டி விகிதத்தை உயர்த்தமாட்டார் என தனியார் நிறுவனம் நடத்திய கருத்துகணிபபில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஜப்பான் மத்திய வங்கியின் வட்டி விகிதம் மேலும் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இன்றைய காலை நேரத்தில் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. 
 
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 82.31 உயர்ந்து 28,605.51 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 28.40 புள்ளிகள் உயர்ந்து 8,804.30 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பார்தி இன்ப்ராடெல் 365.70 2.74%
பஜாஜ் ஆட்டோ 2,952.90 2.28%
ஹிண்டால்கோ 148.60 2.06%
எய்கர் மோட்டார்ஸின் 23,772.60 1.47%
டாடா மோட்டார்ஸ் (டி) 351.45 1.30%
 
விலை குறைந்த பங்குகள்
 
டெக் மஹிந்திரா 455.50 -1.45%
அல்ட்ராடெக் சிமெண்ட் 3,959.10 -0.74%
சிப்லா 599.30 -0.59%
ஐசிஐசிஐ வங்கி 270.75 -0.50%
டாக்டர் ரெட்டிகள் ஆய்வகங்கள் 3,142.75 -0.48%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ