Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காலையில் ஏற்றம்.. மாலையில் இறக்கம்.. ஜப்பான், அமெரிக்க மத்திய வங்கிகளின் அறிவிப்பால்..!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (21.09.16) மாலை நேர வர்த்தகத்தில் ப்ளாட் ஆக முடிவடைந்தது.
 
இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 44 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 111.30 புள்ளிகளாக அதிகரித்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 44.02 புள்ளிகள் உயர்ந்து 28,567.22 புள்ளிகளாக உள்ளது. ரியல் எஸ்டேட், சுகாதாரம் மற்றும் உலோகம் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்து காணப்பட்டன. 
 
இந்த நிலையில் இன்று ஜப்பான் மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை -0.10%லிருந்து -0.20% ஆக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுபோன்ற எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாததால் இந்திய பங்குச் சந்தைகள் வர்த்தகத்தின் இடையே 100 புள்ளிகள் வரை அதிகரித்து காணப்பட்டன. அதேசமயம் இன்று இரவு அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகித குறித்த அறிவிப்பினை வெளியிட உள்ள காரணத்தினாலும் முதலிட்டாளர்கள் கவனத்துடன் வர்த்தகம் மேற்கொண்டதால் வர்த்தகத்தின் இறுதியில் சந்தை ப்ளாட் ஆக நிறைவடைந்தது. 
 
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 15.78 புள்ளிகள் குறைந்து 28,507.42 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 1.25 புள்ளிகள் உயர்ந்து 8,777.15 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பார்தி இன்ப்ராடெல் 372.65 4.69%
எய்கர் மோட்டார்ஸின் 24,198.65 3.29%
ஹிண்டால்கோ 149.55 2.71%
டாடா ஸ்டீல் 369.80 1.15%
ஹெச்யூஎல் 913.05 1.12%
 
விலை குறைந்த பங்குகள்
 
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 175.30 -1.57%
பேங்க் ஆப் பரோடா 164.35 -1.41%
எஸ்பிஐ 251.15 -1.30%
ஐடிசி 253.65 -1.28%
அம்புஜா சிமென்ட்ஸ் 264.40 -1.05%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ