Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓய்வு காலத்தில் யாரிடமும் கையேந்தாமல் இருக்க..!

சேலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வு கூட்டம்....!!!
ஓய்வு காலத்தில் யாரிடம் கையேந்தாமல் இருக்க..!
 
நாணயம் விகடன் மற்றும் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து மியூச்சுவல் ஃபண்ட் -  செல்வத்தைப் பெருக்கும் முதலீடு என்கிற தலைப்பில் சேலத்தில் விழிப்பு உணர்வு கூட்டத்தை நடத்தின. 
 
முதலில் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி, முதலீடு செய்ய வேண்டியதன் அவசியம் என்ன என்பதை விளக்கி பேசினார்.
 
 
 
சுவாமிநாதன் கருணாநிதி
 
''இன்றைக்கு குடும்ப மாதச் செலவுக்கு ரூ. 30,000 தேவைப்படுகிறது என்றால் இது அடுத்த 10,20 மற்றும் 30 வருடங்களில் முறையே 53,000, 1 லட்சம், 1.7 லட்சம் தேவைப்படும். இதற்கு பணவீக்க விகிதம் தாண்டி வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்வது அவசியம் " என்றார் அவர்.
 
கூட்டத்தில் பங்கேற்ற பெண் முதலீட்டாளர்களுடன் முதலீட்டு ஆலோசர்கள்..
 
அடுத்து பேசிய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின்  முதலீட்டாளர் கல்வி உதவி துணைத் தலைவர் எஸ். குருராஜ், மியூச்சுவல் ஃபண்ட் வகைகள், யாருக்கு என்ன ஃபண்ட் ஏற்றது என்பது குறித்து விளக்கி பேசினார். அவர், சம்பளத்தில்  குறைந்தது 25% சேமிக்க வேண்டும். இதில் 10% தொகையை வேலைக்கு சேர்ந்த உடனேயே ஓய்வு காலத்துக்காக முதலீடு செய்ய ஆரம்பித்துவிட வேண்டும். ரிட்டயரான பிறகும் கட முதலீட்டில் 20% ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் இருக்க வேண்டும். அப்படி செய்தால் கடைசி காலத்தில்  பணத் தேவைக்கு பிள்ளைகளை எதிர்பார்க்க தேவை இல்லை." என்றார்.  
எஸ்.குருராஜ்
 
முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் சிறப்புரையாற்றினார். ''இப்போது தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வருகிறோம். எதிர்காலத்தில் காற்றையும் காசு கொடுத்து வாங்க வேண்டி வரும். இது போன்ற செலவுகளுக்காக கட்டாயம் முதலீடு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். ஒருவரின் முதலீடு என்பது பணவீக்க விகிதத்தை தாண்டிய வருமானத்தை தரும் அதே வேளையில் , வரிச் சலுகை அளிப்பதாகவும், எதிர் கால தேவையை பூர்த்தி செய்வதாகவும் இருப்பது அவசியம்" என்றார். 
இறுதியாக முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் பதில் அளித்தனர்.
வ.நாகப்பன்
''பங்குச் சந்தை ஏற்றத்தில் அல்லது இறக்கத்தில் எப்போது முதலீடு செய்ய வேண்டும்? என ஒரு முதலீட்டாளர் கேட்க, '' முதலீடு செய்வதற்கு சந்தையின் செயல்பாட்டை பார்க்க தேவை இல்லை. சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்ஐபி) மூலம் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் நல்ல வருமானம் கிடைக்கும். சிறு முதலீட்டாளர்களுக்கு எஸ்ஐபி பெஸ்ட்" என வ.நாகப்பன் பதில் அளித்தார்.
 
- சி.சரவணன்
படங்கள் க. தனசேகரன் 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close