Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; அமெரிக்காவின் முடிவால் சென்செக்ஸ் அதிரடி!

 
காலை 10.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (22.09.16) காலை நேர வர்த்தகத்தில் அதிக ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.  
 
நேற்று ஜப்பான் மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை -0.10% லிருந்து -0.20% ஆக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுபோன்ற எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாததால் இந்திய பங்குச் சந்தைகள் வர்த்தகத்தின் இடையே 100 புள்ளிகள் வரை அதிகரித்து காணப்பட்டன. அதேசமயம் நேற்று இரவு அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகித குறித்த அறிவிப்பினை வெளியிட உள்ள காரணத்தினாலும் முதலிட்டாளர்கள் கவனத்துடன் வர்த்தகம் மேற்கொண்டதால் வர்த்தகத்தின் இறுதியில் சந்தை ப்ளாட் ஆக நிறைவடைந்தது. 
 
இந்த நிலையில் நேற்று அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளமால் 0.50% என்றளவிலேயே உள்ளது. இதன் தாக்கத்தினால் இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய காலை நேர வர்த்தகத்தில் அதிக ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. 
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 294.01 புள்ளிகள் உயர்ந்து 28,808.20 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 92.10 புள்ளிகள் உயர்ந்து 8,867.90 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஹிண்டால்கோ 154.30 3.18
ஹீரோ மோட்டோகார்ப் 3,557.00 2.82
இன்டஸ் இன்ட் வங்கி 1,215.55 2.58
அதானி துறைமுகங்கள் 276.55 2.54
பேங்க் ஆப் பரோடா 168.40 2.46 என்ற
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐடியா செல்லுலார் 83.60 -1.01%
டிசிஎஸ் 2,397.60 -0.65%
விப்ரோ 481.50 -0.49%
ஹெச்சிஎல் டெக் 790.40 -0.28%
டாடா பவர் 76.05 -0.26%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ