Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்க அறிவிப்பால் இந்திய சந்தை அதிகரிப்பு!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (22.09.16) மாலை நேர வர்த்தகத்தில் அதிக ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.  
 
நேற்று இரவு நடந்த அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளமால் 0.50% என்றளவிலேயே தொடர்வதாக அறிவித்தது. இதன் தாக்கத்தினால் சர்வதேச சந்தைகளும், ஆசிய சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகின. இதனையடுத்து இந்திய பங்குச் சந்தைகளும் அதிக ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தன. 
 
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 265.71 புள்ளிகள் உயர்ந்து 28,773.13 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 90.30 புள்ளிகள் உயர்ந்து 8,867.45 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஆரோபிந்தோ பார்மா 856.95 6.10
ஹிண்டால்கோ 154.60 3.38
பேங்க் ஆப் பரோடா 169.45 3.10 என்ற
இன்டஸ் இன்ட் வங்கி 1,219.60 2.92
எஸ்பிஐ 257.90 2.69
 
விலை குறைந்த பங்குகள்
 
டிசிஎஸ் 2,378.00 -1.47%
டெக் மஹிந்திரா 454.75 -1.39%
ஐடியா செல்லுலார் 83.35 -1.30%
ஆக்சிஸ் வங்கி 591.80 -1.19%
லூபின் 1,528.65 -1.11%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ