Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லாபநோக்கில் விற்பனையால் சந்தை சரிந்தது!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (23.09.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது. 
 
இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 58 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 265.71 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 58.20 புள்ளிகள் சரிந்து 28,714.93 புள்ளிகளாக இருந்தது. வங்கி, தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், மின்சாரம் மற்றும் எப்எம்சிஜி போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை குறைந்து காணப்பட்டன.
 
இந்த நிலையில் மதியத்திற்கு பிறகு ஐரோப்பிய சந்தை இறக்கத்தில் வர்த்தகமானதால் முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்த காரணத்தினால் வாரத்தின் இறுதிநாளான இன்று சந்தை சரிவுடன் முடிவடைந்தது. 
 
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 104.91 புள்ளிகள் குறைந்து 28,668.22 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 35.90 புள்ளிகள் குறைந்து 8,831.55 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ரிலையன்ஸ் 1,102.80 1.27
ஹெச்சிஎல் டெக் 797.25 1.06
டாக்டர் ரெட்டிகள் ஆய்வகங்கள் 3,182.20 1.04
பிபிசிஎல் 604.65 0.98
டிசிஎஸ் 2,398.10 0.85
 
விலை குறைந்த பங்குகள்
 
ஆக்சிஸ் வங்கி 557.45 -5.80%
ஏசிசி 1,617.00 -2.94%
லூபின் 1,489.45 -2.56%
அம்புஜா சிமென்ட்ஸ் 259.00 -2.47%
அரவிந்தர் ஃபார்ம் 841.15 -1.84%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ