Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! 
மெட்டல் & ஆயில்
 
இந்த வாரம் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எப்படி வர்த்தகமாகும் என்பது குறித்து சொல்கிறார் கேடியா நிறுவனத்தின் அனலிஸ்ட் சரவணன். 
 
தங்கம்!
 
எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கத்தின் விலை இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே விலை உயர்ந்து வர்த்தகம் ஆகிவருகிறது. ரஷ்யா கிட்டத்தட்ட 7,00,000 அவுன்ஸ் தங்கத்தை வாங்கியுள்ளது மற்றும் ஆசிய நாடுகளின் பண்டிகை காலத் தேவை அதிகரித்துள்ளதே இதற்கான காரணம். மேலும், எஃப்ஒஎம்சி கூட்டத் தொடரில் வட்டி விகித உயர்வு இந்த ஆண்டு இறுதிக்குள் எதிர்பார்க்கலாம் என்று அறிவித்துள்ளது. 
 
வரும் வாரத்தில் தங்கத்தின் விலை சற்று உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. காமெக்ஸ் சந்தையில் தங்கத்தின் விலை 1,354 டலர் வரை செல்ல வாய்ப்புள்ளது. எம்சிஎக்ஸ் சந்தையில் அக்டோபர் மாத கான்ட்ராக்ட் 31,050 என்ற நிலை வரும்போது வாங்கலாம். தங்கத்தின் விலை வரும் நாட்களில் 31,700 வரை செல்ல வாய்ப்புள்ளது. 
 
வெள்ளி!
 
வெள்ளியைப் பொறுத்தவரை, எம்சிஎக்ஸ் சந்தையில் வரும் வாரத்தில் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடந்த புதன் அன்று நடந்து முடிந்த எஃப்ஒஎம்சி கூட்டத் தொடரில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றம் செய்யப்படவில்லை. எனினும், வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யக்கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. எனவே, வரும் வாரத்தில் வெள்ளியானது 20.70 டாலர் வரை செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. 
 
அது மட்டுமின்றி, தொழிற்சாலைகளில் வெள்ளிக்கான தேவை அதிகரித்துள்ளதால், முதலீடும் அதிகரித்துள்ளது. எனவே, இந்த ஆண்டு இறுதிக்குள் வெள்ளி விலை 57,000 வரை செல்ல வாய்ப்புள்ளது. எம்சிஎக்ஸ் சந்தையில் டிசம்பர் கான்ட்ராக்ட் வெள்ளியை 46,200 என்ற நிலையில் வாங்கலாம். வரும் நாட்களில் 48,000 வரை செல்லும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கச்சா எண்ணெய்!
 
எம்சிஎக்ஸ் சந்தையில் கச்சா எண்ணெய் அக்டோபர் மாத கான்ட்ராக்ட் தொடக்கத்திலிருந்தே உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. கச்சா எண்ணெய் கையிருப்பு எதிர்பார்த்ததைவிட வெகுவாகக் குறைந்து இருந்தது. எனவே, வரும் வாரத்திலும் விலை உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி, அடுத்த வாரம் நடைபெற இருக்கும் ஒபெக் கூட்டத் தொடரில் கச்சா எண்ணெய் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம் செய்வது பற்றி பேசலாம் என்ற தகவல் எதிர்பார்க்கப்படுகிறது.
 
அப்படி ஒரு செய்தி வெளியானால் கச்சா எண்ணெய் அக்டோபர் மாத கான்ட்ராக்ட் 54 டாலர் முதல் 57 டாலர் வரை செல்லும். தற்போது எம்சிஎக்ஸ் சந்தையில் 3,020 என்ற நிலையில் வாங்கலாம். வரும் நாட்களில் 3,240 வரை செல்ல வாய்ப்புள்ளது. 
 
இயற்கை எரிவாயு!
 
எம்சிஎக்ஸ் சந்தையில் இயற்கை எரிவாயு கடந்த ஒரு மாத காலமாக விலை உயர்ந்து வருகிறது. இதுவே காமெக்ஸ் சந்தையில் 3 டாலருக்கு மேல் வர்த்தகம் ஆகியுள்ளது. கடந்த 16 மாதங்களில் முதல் முறையாக இந்த உச்சத்தை எட்டியுள்ளது. இது வரும் வாரங்களிலும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 
 
தற்போது டெக்னிக்கல்படி, இயற்கை எரிவாயுவின் விலை அதிகமாக வாங்கப்பட்ட நிலையில் இருக்கிறது. எனவே, மறுபடியும் 198 முதல் 200 டாலர் என்ற நிலை வரும்போது வாங்கலாம். இயற்கை எரிவாயு செப்டம்பர் மாத கான்ட்ராக்ட் இந்த வாரத்தில் 216 வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கமாடிட்டி டிரேடிங்! 
அக்ரி கமாடிட்டி 
 
இந்த வாரம் சோயாபீன்ஸ், ஏலக்காய், சீரகம் விலைப்போக்கு குறித்து விளக்குகிறார் ‘இண்டிட்ரேட் கமாடிட்டீஸ் அண்ட் டெரிவேட்டிவ்ஸ்’ நிறுவனத்தின் முதன்மை மேலாளர் முருகேஷ் குமார். 
 
சோயாபீன்ஸ்! 
 
சர்வதேச மற்றும் இந்திய அளவில் மோசமான வானிலை நிலவுவதால், கடந்த வாரத்தில் என்சிடிஇஎக்ஸ் சந்தையில் சோயாபீன்ஸ் விலை அதிகரித்துக் காணப்பட்டது. டெக்னிக்கல்படி, குறைந்த அளவிலேயே வர்த்தகமாகி வரும் சோயாபீன்ஸ் விலை 3,150-லிருந்து 3,700-க்கு இடையே வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
எம்ஏசிடி, மூவிங் ஆவரேஜ் மற்றும் ஆர்எஸ்ஐ போன்ற டெக்கினிக்கல் இன்டிகேட்டர்கள் சோயாபீன்ஸ் விலை ஏற்றத்துக்கேற்ப சப்போர்ட்-ஆக வர்த்தகமாகி வருவதால், வரும் நாட்களில் அக்டோபர் மாத கான்ட்ராக்ட் 3,400-யை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதுமட்டுமின்றி கடந்த சில நாட்களில் என்சிடிஇஎக்ஸ் சந்தையில் சோயாபீன்ஸ் வால்யூம் மற்றும் ஒப்பன் இன்ட்ரஸ்ட்கூட அதிகரித்துள்ளதால், இந்த வாரம் சோயாபீன்ஸ் விலை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. எனினும் சோயாபீன்ஸ் விலை 3,150-க்கு கீழே தினசரி வர்த்தகத்தில் க்ளோஸ் ஆகி வர்த்தகம் நடைபெறும்பட்சத்தில் இதன் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கலாம். 
 
ஏலக்காய்! 
 
ஏலக்காய் புதிய வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால், எம்சிஎக்ஸ் சந்தையில் அக்டோபர் மாத கான்ட்ராக்ட் விலை கடந்த வாரம் சரிவுடன் வர்த்தகமானது. மே மற்றும் ஜூன் மாதங்களில் வறண்ட வானிலையாலும், மார்ச் மாதத்திலிருந்து புதிய வரத்து அதிகரிக்கத் தொடங்கியதாலும் இதன் விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது. 
 
டெக்னிக்கல்படி, ஏலக்காய் விலை வரும் நாட்களில் மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், ஏலக்காய் விலை 1,200-க்கு மேலே க்ளோஸ் ஆகி வர்த்தகமாகும்பட்சத்தில் அதன் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். 
 
சீரகம்! 
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தையில் சீரகத்தின் தேவை குறைந்து வருவதினால் என்சிடிஎக்ஸ் சந்தையில் அக்டோபர் மாத சீரகம் கான்ட்ராக்ட்டின் விலை கடந்த வாரம் சரிவைச் சந்தித்தது. டெக்னிக்கல்படி, சீரகத்தின் விலை வரும் நாட்களில் 17,600 முதல் 16,600 வரை வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
எனினும், சீரகத்தின் விலை வரும் நாட்களில் மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, எம்ஏசிடி டெக்னிக்கல் இன்டிகேட்டர்படி, சீரகத்தின் விலையில் தற்போதைய போக்கு பியரிஸ் டிரென்டாக இருப்பதால், குறுகிய காலத்தில் இறக்கத்தில் வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சீரகத்தின் விலையைப் பொறுத்தவரை, 16,000-க்கு மேல் வர்த்தகமாகும்பட்சத்தில் இதன் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். 
சோ.கார்த்திகேயன்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ