Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்க அதிபர் தேர்தல் தாக்கத்தினால் சரிந்தது சந்தை!

 
மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (26.09.16) மாலை நேர வர்த்தகத்தில் அதிக இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது. 
 
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சர்வதேச மற்றும் ஆசிய சந்தைகள் பலவீனமான நிலையில் வர்த்தகமாகி வந்ததால் இந்திய சந்தைகளும் சரிவுடன் வர்த்தகமாகி வந்தன. இந்த நிலையில் முதலீட்டாளர்கள் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பை மாறி, அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து கவனத்துடன் வர்த்தகம் மேற்கொண்டதால் சந்தை சரிவுடன் முடிவடைந்தது. 
 
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 8ம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிபர் வேட்பாளராக குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹில்லாரி கிளின்டன் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கிடையே முதல் விவாதம் இன்று நடைபெற உள்ளது. இதன் தாக்கத்தினால் சந்தைகள் சரிவில் முடிவடைந்துள்ளது. 
 
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 373.94 புள்ளிகள் குறைந்து 28,294.28 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 108.50 புள்ளிகள் குறைந்து 8,723.05 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பிபிசிஎல் 622.45 2.94%
கோல் இந்தியா 332.45 1.23%
ஜீ மகிழ்விக்க 530.65 1.15%
டாக்டர் ரெட்டிகள் ஆய்வகங்கள் 3,199.65 0.55%
ரிலையன்ஸ் 1,107.20 0.40%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஓஎன்ஜிசி 249.55 -4.22%
ஐசிஐசிஐ வங்கி 262.55 -3.21%
டாடா மோட்டார்ஸ் 535.30 -3.21%
என்டிபிசி 152.15 -3.03%
ஐடியா செல்லுலார் 80.30 -2.67%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP