Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதலீட்டாளர்கள் ஷார்ட் கவரிங் நடவடிக்கையால் சந்தை அதிகரிப்பு!

காலை 10.15 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (27.09.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 8ம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிபர் வேட்பாளராக குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹில்லாரி கிளின்டன் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கிடையே முதல் விவாதம் நேற்று நடைபெற்றது. இதன் தாக்கத்தினால் இந்திய பங்குச் சந்தைகள் நேற்று சரிவில் முடிவடைந்தது.
 
இந்த நிலையில் இன்றைய காலை நேரத்தின் போது சர்வதேச சந்தைகள் சாதகமாக வர்த்தகமாகி வருவதால் இந்திய சந்தைகள் வர்த்தக தொடக்கத்தின்போது 100 புள்ளிகள் வரை அதிகரித்து காணப்பட்டது. இதுமட்டுமின்றி தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி, கார் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி பங்குகளை முதலீட்டாளர்கள் ஷார்ட் கவரிங் செய்ததால் இன்றைய சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 39.41 புள்ளிகள் உயர்ந்து 28,327.78 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 14.60 புள்ளிகள் உயர்ந்து 8,737.15 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஆரோபிந்தோ பார்மா 855.90 2.05%
டிசிஎஸ் 2,440.15 1.63%
ஜீ மகிழ்விக்க 537.95 1.38%
கோல் இந்தியா 336.55 1.23%
ரிலையன்ஸ் 1,118.40 1.01%
 
விலை குறைந்த பங்குகள்
 
பார்தி ஏர்டெல் 315.25 -1.59%
பார்தி இன்ப்ராடெல் 360.65 -1.29%
பிபிசிஎல் 615.95 -1.04%
ஐசிஐசிஐ வங்கி 260.00 -0.97%
டாடா பவர் 75.15 -0.92%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ