Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்வதேச சந்தையால் சரிந்தது சென்செக்ஸ்!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (27.09.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 138 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் குறியீடு 478.85 புள்ளிகளாக குறைந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 138.46 புள்ளிகள் உயர்ந்து 28,432.74 புள்ளிகளாக இருந்தது. ரியல் எஸ்டேட், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் சுகாதாரம் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 0.92% வரை அதிகரித்து காணப்பட்டன. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 45.45 புள்ளிகள் அதிகரித்து 8,768.50 புள்ளிகளாக இருந்தது. குறிப்பாக தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி, கார் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி பங்குகளை முதலீட்டாளர்கள் ஷார்ட் கவரிங் செய்ததால் இன்றைய காலை நேரத்தில் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமானது. எனினும் மதியத்திற்கு பிறகு சர்வதேச சந்தை பலவீனமாக வர்த்தகமானதால் இந்திய சந்தை சரிவுடன் முடிவடைந்தது. 
 
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 70.58 புள்ளிகள் குறைந்து 28,223.70 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 16.65 புள்ளிகள் குறைந்து 8,706.40 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
அரவிந்தர் ஃபார்ம் 860.55 2.61%
டிசிஎஸ் 2,436.10 1.46%
அம்புஜா சிமென்ட்ஸ் 258.15 1.29%
லூபின் 1,512.20 1.18%
விப்ரோ 484.20 1.02%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஹிண்டால்கோ 150.05 -2.31%
அதானி துறைமுகங்கள் 264.70 -2.11%
லார்சன் 1,436.40 -2.00%
பிபிசிஎல் 610.75 -1.88%
பார்தி இன்ப்ராடெல் 358.50 -1.87%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ