Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எஃப் அண்ட் ஒ எக்ஸ்பியரி எதிரொலி சந்தை அதிகரிப்பு!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (28.09.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
நேற்றைய வர்த்தகத்தில் தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி, கார் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி பங்குகளை முதலீட்டாளர்கள் ஷார்ட் கவரிங் செய்ததால் நேற்றைய காலை நேர வர்த்தகத்தில் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமானது. எனினும் மதியத்திற்கு பிறகு சர்வதேச சந்தை பலவீனமாக வர்த்தகமானதால் இந்திய சந்தை சரிவுடன் மூன்றாவது நாளாக இறக்கத்தில் முடிவடைந்தது. 
 
இந்த நிலையில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்தில் நிறைவடைந்துள்ளது. ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்த காரணத்தினாலும், வங்கி மற்றும் ஆட்டோ துறையை சார்ந்த பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கி குவித்ததால் சந்தை ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. இதுமட்டுமின்றி நாளை எஃப் அண்ட் ஒ எக்ஸ்பியரி என்பதால் முதலீட்டாளர்கள் தங்களுடைய பொசினை க்ளோஸ் செய்து வருவதால் சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்துள்ளது. 
 
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 69.11 புள்ளிகள் உயர்ந்து 28,292.81 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 38.75 புள்ளிகள் உயர்ந்து 8,745.15 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
எய்கர் மோட்டார்ஸின் 25,786.55 4.64%
ஹிண்டால்கோ 156.90 4.57%
ஐடியா செல்லுலார் 82.50 3.71%
டாடா ஸ்டீல் 380.35 3.37%
ஜீ எண்டர்டெயின் 548.00 2.93%
 
விலை குறைந்த பங்குகள்
 
ரிலையன்ஸ் 1,090.65 -1.79%
டெக் மஹிந்திரா 440.50 -1.64%
கோல் இந்தியா 328.45 -1.29%
ஹெச்யூஎல் 887.15 -1.135
சன் பார்மா 764.80 -0.69%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ