Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்வதேச சந்தையால் சதமடித்தது சென்செக்ஸ்!

காலை 10.25 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (29.09.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. 
 
ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்த காரணத்தினாலும், வங்கி மற்றும் ஆட்டோ துறையை சார்ந்த பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கி குவித்ததாலும், இன்று எஃப் அண்ட் ஒ எக்ஸ்பியரி என்பதாலும் முதலீட்டாளர்கள் தங்களுடைய பொசினை க்ளோஸ் செய்து வந்ததால் நேற்றைய சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்தது. 
 
இந்த நிலையில் இன்றைய காலை நேர வர்த்தகத்தின்போது சர்வதேச சந்தை எழுச்சியுடன் வர்த்தகமாகி வருவதால் இந்திய பங்குச் சந்தைகளும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 102.45 புள்ளிகள் உயர்ந்து 28,391.10 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 30.05 புள்ளிகள் உயர்ந்து 8,774.55 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
கெயில் 383.75 2.21%
ஓஎன்ஜிசி 256.50 1.93%
யெஸ் பேங்க் 1,295.30 1.90%
எய்கர் மோட்டார்ஸின் 26,255.10 1.82%
எம் அண்ட் எம்1,399.00 1.62%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஆக்சிஸ் வங்கி 544,75 -0,79%
அரவிந்தர் ஃபார்ம் 863,00 -0,73%
டாடா பவர் 75,60 -0,66%
இன்டஸ் இன்ட் வங்கி 1,215.00 -0,58%
விப்ரோ 480,95 -0,57%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ