Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீவிரவாதிகள் முகாம் மீது இந்தியா தாக்குதல்; பதற்றத்தில் பங்குச் சந்தை 570 புள்ளிகள் வரை சரிவு!

மாலை 3.30 மணி நிலவரம்
 
தீவிரவாதிகள் முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதால் இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (29.09.16) மாலை நேர வர்த்தகத்தில் அதிக இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
 
இன்றைய காலை நேர வர்த்தகத்தின்போது சர்வதேச சந்தை எழுச்சியுடன் வர்த்தகமாகி வந்ததால் இந்திய பங்குச் சந்தைகளும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் தீவிரவாதிகள் முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதால் சந்தை சரிவில் முடிவடைந்துள்ளது.  
 
காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாமில் கடந்த 18–ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 18 ராணுவ வீரர்கள் பலியாயினர். தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி அதற்கான தகுந்த ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா அளித்தது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
இந்த நிலையில் இந்திய உளவுத்துறை மூலம், பாகிஸ்தான் எல்லை பகுதியில் எங்கெல்லாம் தீவிரவாதிகளின் முகாம் இருக்கிறது என்பதை இந்தியா உளவு பார்த்து வந்தது. உளவுத்துறை கொடுத்த தகவல் அடிப்படையில், நேற்று இரவில் இந்திய விமானப்படை, தைரியமாக பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து, தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை சரமாரியாக வீசியது. இந்த அதிரடி தாக்குதலை சற்றும் எதிர்பாராத பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொத்துக் கொத்தாக செத்து விழுந்தனர். தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க அங்கு வந்திருந்த பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த இருவரும் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்ட தகவலை அந்த நாடும் உறுதி செய்துள்ளது. 
இதன் தாக்கத்தினால் முதலீட்டாளர்கள்ௐ பதற்றத்தில் பங்குகளை விற்பனை செய்த காரணத்தினால் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 570 புள்ளிகள் வரை சரிவைச் சந்தித்தது.
 
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 465.28 புள்ளிகள் குறைந்து 27,827.53 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 153.90 புள்ளிகள் குறைந்து 8,591.25 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பார்தி இன்ப்ராடெல் 371.35 2.36
டிசிஎஸ் 2,437.80 0.61
ஜீ எண்டர்டெயின் 549.70 0.31
 
விலை குறைந்த பங்குகள்
 
பி.எச்.இ.எல் 133,00 -7,57
அதானி துறைமுகங்கள் 256,80 -5,24
அரவிந்தர் ஃபார்ம் 825,25 -5,07
ஹிண்டால்கோ 150.00 -4.40
ஐசிஐசிஐ வங்கி 250,35 -3,99
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ