Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியா-பாக். போர் போளுமா? பதற்றத்தில் பங்குச் சந்தை!

காலை 10.20 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (29.09.16) காலை நேர வர்த்தகத்தில் சற்று இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
 
காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாமில் கடந்த 18–ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 18 ராணுவ வீரர்கள் பலியாயினர். தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி அதற்கான தகுந்த ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா அளித்தது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
இந்த நிலையில் இந்திய உளவுத்துறை மூலம், பாகிஸ்தான் எல்லை பகுதியில் எங்கெல்லாம் தீவிரவாதிகளின் முகாம் இருக்கிறது என்பதை இந்தியா உளவு பார்த்து வந்தது. உளவுத்துறை கொடுத்த தகவல் அடிப்படையில், நேற்று முன் தின இரவில் இந்திய விமானப்படை, தைரியமாக பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து, தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை சரமாரியாக வீசியது. இந்த அதிரடி தாக்குதலை சற்றும் எதிர்பாராத பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொத்துக் கொத்தாக செத்து விழுந்தனர். தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க அங்கு வந்திருந்த பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த இருவரும் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்ட தகவலை அந்த நாடும் உறுதி செய்துள்ளது.
 
இதன் தாக்கத்தினால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர்ப் பதட்டம் அதிகரித்திருப்பதால் மும்பை பங்குச் சந்தை நேற்று ஆட்டம் கண்டது. சென்செக்ஸ் வேகமாக வீழ்ச்சி அடைந்தது. அதேபோல ரூபாய் மிதிப்பும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. முதலீட்டாளர்கள்ௐ பதற்றத்தில் பங்குகளை விற்பனை செய்த காரணத்தினால் நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 570 புள்ளிகள் வரை சரிவைச் சந்தித்தது. இந்த நிலையில் இன்றும் எல்லையில் தீவிரவாதிகள் முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்திய காரணத்தினால் காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் வரை சரிவைச் சந்தித்தது. 
 
தற்போதைய நிலவரப்படி இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 29.36 புள்ளிகள் குறைந்து 27,800.56 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 0.90 புள்ளிகள் குறைந்து 8,592.00 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
கிராஸிம் 4,808.35 2.14%
கெயில் 370.95 2.06%
எய்கர் மோட்டார்ஸின் 25,415.00 1.99%
பேங்க் ஆப் பரோடா 164.70 1.73%
ஓஎன்ஜிசி 254.15 1.60%
 
விலை குறைந்த பங்குகள்
 
சிப்லா 584,50 -3,04%
பார்தி ஏர்டெல் 308,65 -2,23%
அதானி துறைமுகங்கள் 251,75 -1,97%
பார்தி இன்ப்ராடெல் 364,55 -1,83%
கோல் இந்தியா 323,20 -1,36%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ