Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்பெஷல் மியூச்சுவல் ஃபண்டுகள்..

ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகள்

அதிக லாபம் அல்லது குறைஞ்ச நஷ்டம், இதுதான் இந்த ஃபண்டோட நோக்கம். பங்குச் சந்தைகள்ல இருக்கிற பலவிதமான முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டுபிடிச்சு, அதுக்கு இடையில உள்ள விலை வித்தியாசங்கள் மூலமா லாபம் சம்பாதிக்கிறதுதான் இதோட ஸ்டைல். அடிப்படையில இது ஒரு தீம்மேட்டிக் ஃபண்ட்! இதை ஓர் உதாரணம் வழியா பார்த்தா ஈஸியா புரியும். 'ஏ'-ங்குற நிறுவனத்துப் பங்கோட விலை, நார்மல் பங்குச் சந்தையில 200 ரூபாயாவும், ஃப்யூச்சர் சந்தையில 230 ரூபாயாவும் இருக்குதுன்னா, முதலீட்டை ஃப்யூச்சர் சந்தைக்கு மாத்தி லாபம் பார்க்குற புத்திசாலி ஃபண்ட் இது!

ஹெட்ஜ் ஃபண்ட்ஸ்
இந்தத் திட்டத்துல முதலீடு பண்ண துணிச்சல் மட்டுமில்லை... துட்டும் எக்கச்சக்கமா வேணும். இந்த ஃபண்டோட ஆரம்ப முதலீடு லட்சக்கணக்குல, ஏன் கோடிக்கணக்குல கூட இருக்கும். பெரும் பணக்காரர்-களுக்கு ஏத்த திட்டம் இது. இதுல திரட்டப்படுற நிதி, ஃப்யூச்சர் அண்ட் ஆப்ஷன்ஸ் மாதிரியான ஹெவி ரிஸ்க் உள்ள இடங்கள்ல முதலீடு செய்யப்படுது. கையில பங்குகளே இல்லாம பங்கு வர்த்தகம் செய்யற முறை ஒண்ணு இருக்கு. ஷார்ட் செல்லிங் முறைனு பேரு. அதேமுறைதான் இந்த ஹெட்ஜ் ஃபண்டுலயும். மொத்தத்துல இதுல ரிஸ்க் ஜாஸ்தி.

கேப்பிட்டல் புரட்டக்ஷன் ஃபண்ட்

'நான் போடுற பணத்துக்கு லாபம் எவ்வளவு கம்மியா கிடைச்சாலும் பரவாயில்லை; முதலுக்கு மோசமாயிடக் கூடாது. இதுக்கு உத்தரவாதம் தர்ற திட்டம் ஏதாவது இருக்கா..?' இப்படி கேக்கிறவங்களுக்காக ஒரு ஃபண்ட் இருக்கு. அதுதான் கேப்பிட்டல் புரட்டக்ஷன் ஃபண்ட். இதுல மூலதனத்துக்கு உத்தரவாதம் உண்டு. என்ன ஒண்ணு... ரிட்டர்ன் குறைவா இருக்கும்.

பென்ஷன் ஃபண்ட்

வயசான காலத்துல பென்ஷன் தர்றதுக்காகவே இருக்-கிறது-தான் இந்த ஃபண்ட். இதுக்கு வரிச் சலுகை-யும் உண்டு. அடிப்படை--யில இது பேலன்ஸ்ட் ஃபண்டுதான். திரட்டப்படுற நிதியில, சுமார் 40% பங்குச் சந்தையிலயும், மீதி கடன் பத்திரங்கள்லயும், நிதிச் சந்தையிலயும் முதலீடு செய்யப்படுது.

இன்டர்வெல் ஃபண்ட்


பொதுவா குளோஸ்ட் எண்டட் ஃபண்ட்டா செயல்படும் இந்த வகை ஃபண்டுகள் குறிப்பிட்ட நாட்கள்ல ஓப்பன் எண்டட் ஃபண்ட்டா மாறும். அந்தச் சமயத்துல திட்டத்துல இருந்து வெளியேறிடலாம். எப்போ ஓப்பன் எண்டட் திட்டமா இருக்கும்ங்கிறதையும் எப்போ குளோஸ்ட் எண்டட் திட்டமா இருக்கும்ங்-கிறதையும் ஃபண்ட் வெளியாகும்போதே அறிவிச்-சிடுவாங்க. சில சமயங்கள்ல அவ்வப்போ விளம்-பரம் மூலமா அறிவிப்பு கொடுக்கிறதும் உண்டு.

(நாணயம் விகடன் எல்.கே.ஜி இணைப்பு புத்தகத்தில் இருந்து)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ