Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நான்கு வார சரிவில் இந்திய பங்குச் சந்தை!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (30.09.16) மாலை நேர வர்த்தகத்தில் சற்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்துள்ளது.
 
இந்தியா பாகிஸ்தான் இடையே போர்ப் பதட்டம் அதிகரித்திருப்பதால் மும்பை பங்குச் சந்தை நேற்று ஆட்டம் கண்டது. சென்செக்ஸ் வேகமாக வீழ்ச்சி அடைந்தது. அதேபோல ரூபாய் மிதிப்பும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. முதலீட்டாளர்கள்ௐ பதற்றத்தில் பங்குகளை விற்பனை செய்த காரணத்தினால் நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 570 புள்ளிகள் வரை சரிவைச் சந்தித்தது.
 
இந்த நிலையில் இன்றும் எல்லையில் தீவிரவாதிகள் முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்திய காரணத்தினால் காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் வரை சரிவைச் சந்தித்தது. எனினும் வர்த்தகத்தின் இறுதியில் சந்தை சற்று ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் எல்லையில் தீவிரவாதிகள் முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதால் கடந்த 4 வாரத்தில் இல்லாத அளவுக்கு சந்தை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. 
 
இன்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 38.43 புள்ளிகள் உயர்ந்து 27,865.96 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 19.90 புள்ளிகள் உயர்ந்து 8,611.15 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
அரவிந்தர் ஃபார்ம் 855.45 3.66%
பேங்க் ஆப் பரோடா 167.40 3.40%
கெயில் 374.65 3.08%
எம் அண்ட் எம் 1,405.70 3.03%
கிராஸிம் 4,836.55 2.74%
 
விலை குறைந்த பங்குகள்
 
சிப்லா 580,05 -3,78
ஐடிசி 241,35 -1,77
டெக் மஹிந்திரா 419,85 -1,71
பார்தி இன்ப்ராடெல் 365,30 -1,63
கோல் இந்தியா 322,30 -1,63
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ