Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமாடிட்டி டிரேடிங்

கச்சா எண்ணெய்!

கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய் ஏற்றமடைந்தது. வாரத் தொடக்கத்தில் 46 டாலர் நிலையில் இருந்த பேரல் கச்சா எண்ணெய் வார இறுதியில் 48 டாலரைத் தாண்டி உயர்ந்தது. இதற்கு காரணம் நீண்ட காலமாக கச்சா எண்ணெய் விலையை உயர்த்த வேண்டி, கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்று கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளிடம் முன்வைத்திருந்த கோரிக்கையை புதன் கிழமை அன்று அவை ஒப்புக்கொண்டதுதான். இந்தச் செய்தியை ஒட்டி கச்சா எண்ணெய் கிட்டதட்ட 5 சதவிகிதம் உயர்ந்தது. கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட இருப்பதால் தேவையைப் பொறுத்து வரும் வாரங்களில் அதன் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம்!

கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய் ஏறிய வேகத்தில் தங்கத்தின் விலை இறங்கி வர்த்தகமானது. வாரத்தின் தொடக்கத்தில் அவுன்ஸ் தங்கம் 1340 டாலர் என்ற நிலையில் இருந்தது படிப்படியாக இறங்கி வார இறுதியில் 1315 டாலர் நிலைக்கு இறங்கியது. இது ஏறக்குறைய 1.8 சதவிகித குறைவு ஆகும். இதற்கு காரணம் தங்கத்திற்கான தேவை குறைந்து காணப்படுவதே என்கிறார்கள். சர்வதேச அளவில் தங்கத்திற்கான டிமாண்ட் இல்லாததாலும் உள்நாட்டு அளவிலும் தங்க  அணிகலன்களுக்கான டிமாண்ட் பெரிதாக அதிகரிக்காததாலும் தான் இந்த விலைக் குறைவு ஏற்பட்டுள்ளது. இது வரும் வாரத்திலும் நீடிக்க வாய்ப்புள்ளது. தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் வரிசையாக வரும் நிலையிலும் தங்கத்தின் டிமாண்ட் அதிகரிக்காதது வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி!

தங்கத்தைப் போலவே வெள்ளியும் கடந்த வாரத்தில் இறங்கினாலும் தங்கத்தைப் போல அல்லாமல் ஓரளவுக்கு மீண்டு வந்தது. வாரத்தொடக்கத்தில் 19.50 டாலருக்கும் மேல் இருந்த அவுன்ஸ் வெள்ளி, 19.14 டாலர் என்ற நிலையில் உள்ளது. இந்திய ரூபாயில் கிலோ வெள்ளி ரூ. 45,500 க்கு வர்த்தகமாகிறது. ஆபரணங்களுக்கான தேவை அதிகரித்தால் வெள்ளி விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close