Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம்; மத்திய அரசு அதிரடியாக குறைப்பு!

 செல்வ மகள், மூத்த குடிமக்கள் போன்ற சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது. 

முன்பு வட்டி விகிதம் ஒவ்வொரு நிதி ஆண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட்டது. இப்போது அரசாங்க கடன் பத்திரங்களுக்கு ஏற்ப காலாண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இப்போது பிபிஎஃப், கிஸான் விகாஸ் பத்திரம், செல்வ மகள் சேமிப்பு திட்டம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் 0.1 சதவிகிதம் மத்திய அரசு குறைத்துள்ளது. 
அதன்படி, அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 தேதி வரையிலாக காலத்துக்கு பிபிஎஃப் வட்டி விகிதம் 8.0 சதவிகிதமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. முன்னதாக 8.1 சதவிகிதமாக இருந்தது. அதேபோல கிஸான் விகாஸ் பத்திரத்தின் வட்டி விகிதம் 7.8 சதவிகிதத்தில் இருந்து 7.7 சதவிகிதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. மூத்த குடிமக்களுக்கான ஐந்து வருட டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி 8.6 சதவிகிதத்தில் இருந்து 8.5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
 
பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி திட்டத்தில் செய்யப்படும் டெபாசிட்களுக்கு 8.5 சதவிகிதமாக வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. முன்னதாக 8.62 சதவிகிதம் வட்டி இருந்தது.
 
கீழே எந்தெந்த சிறு சேமிப்பு திட்டங்களுக்கு எவ்வளவு வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது என்பதற்கான விவரம்:-
 
 
சோ.கார்த்திகேயன்
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close