Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்வதேச சந்தையால் சென்செக்ஸ் 370 புள்ளிகள் அதிகரிப்பு!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (3.10.16) மாலை நேர வர்த்தகத்தில் அதிக ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது. 
 
இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 161 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 38.43 புள்ளிகளாக அதிகரித்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 160.79 புள்ளிகள் உயர்ந்து 28,026.75 புள்ளிகளாக உள்ளது. ஆட்டோ, ரியல் எஸ்டேட், சுகாதாரம், உலோக, மூலதன பொருட்கள் மற்றும் நுகர்வோர் சாதனங்கள் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்து காணப்பட்டன. குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் ஆட்டோ நிறுவனங்களின் விற்பனை எதிர்பார்ப்பை மிஞ்சிய இருந்த காரணத்தினால் சந்தை அதிகரித்து காணப்பட்டது. இதுமட்டுமின்றி சர்வதேச சந்தை அதிக எழுச்சியுடன் வர்த்தகமாகி வந்ததாலும், நாளை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வு கூட்டம் நடைபெறுவதாலும் முதலீட்டாளர்கள் ஆவலாக பங்குகளை வாங்கி குவித்ததால் சந்தை அதிகரித்து காணப்பட்டது. 
 
இன்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 377.33 புள்ளிகள் உயர்ந்து 28,243.29 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 126.95 புள்ளிகள் உயர்ந்து 8,738.10 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஜீ எண்டர்டெயின் 578.85 5.87
எய்கர் மோட்டார்ஸின் 25,796.25 3.90
மாருதி சுசூகி 5,681.00 3.72
ஹீரோ மோட்டோகார்ப் 3,521.15 3.15
இன்டஸ் இன்ட் வங்கி 1,232.90 3.09
 
விலை குறைந்த பங்குகள்
 
டிசிஎஸ் 2,411.70 -0,79
பார்தி இன்ப்ராடெல் 362,75 -0,70
போஷ் 22,752.95 -0,20
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ