Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம்: ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு

நடப்பு நிதியாண்டின் 4-வது நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. புதிய கவர்னராக பதவியேற்றுள்ள உர்ஜித் பட்டேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
 
ரிசர்வ் வங்கி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு அறிக்கையை வெளியிடுகிறது. ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ௐளது. இதில் வட்டி நிர்ணயம் குறித்து 6 பேர் குழு ஆலோசனை நேற்று தொடங்கியது.
 
நிதிக் கொள்கை கூட்டத்தில் வங்கிகளுக்கான குறுகியகால கடன் வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படுகிறது. ரகுராம் ராஜன் இருந்தபோது ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னரே வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் இருந்தது.  இதற்கு மாற்றாக புதிய கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில் 6 பேர் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இதில் ரிசர்வ் வங்கி தரப்பில் 3 பேரும், வெளியில் இருந்து 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வட்டி நிர்ணயம் குறித்து முடிவு செய்ய முதல் கூட்டத்தை நேற்று துவக்கியுள்ளனர். இதில் பண வீக்கம், உலக பொருளாதார நிலை உள்ளிட்ட  பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு வட்டி நிர்ணயிக்கப்படும். இந்தக் குழு உறுப்பினர்களிடம் ஒருமித்த கருத்து ஏற்படாவிட்டால் சிக்கலாகிவிடும். அவ்வாறு ஏற்பட்டால் ரிசர்வ் வங்கி கவர்னர் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி வட்டியை முடிவு செய்வார்.
 
இந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் 4-வது நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தில் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு 'ரெப்போ' 6.25% ஆக உள்ளது. இது முன்னதாக 6.50% ஆக இருந்தது. ரொக்க கையிருப்பு விகிதமான சி.ஆர்.ஆர் 4% ஆக தொடருகிறது. 
 
வழக்கமாக நிதிக்கொள்கை அறிக்கை சமர்ப்பித்த பிறகு காலை 11 மணிக்கே வட்டி விகித நிர்ணயம் பற்றிய அறிவிப்பு வெளியாகிவிடும். ஆனால், இந்த முறை உர்ஜித் படேல் தலைமையிலான 6 பேர் குழு ஆலோசனை மதியம் முடிவடைந்த பிறகு சுமார் 2.30க்கு மேல்தான் வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ