Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய கவர்னர்.. புதிய நடைமுறை.. புதிய வட்டி விகிதம்!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (4.10.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் ஆசிய பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வந்ததாலும், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் நடைபெறுவதாலும் சந்தை அதிகரித்து காணப்பட்டது. 
இந்த நிலையில் புதிய கவர்னரான உர்ஜித் பட்டேல் தலைமையில் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் இன்று நடைபெற்றது.
 
4-வது நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தில் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு 'ரெப்போ' 6.25% ஆக உள்ளது. இது முன்னதாக 6.50% ஆக இருந்தது. ரொக்க கையிருப்பு விகிதமான சி.ஆர்.ஆர் 4% ஆக தொடருகிறது. வட்டி விகிதம் குறைப்பு நடவடிக்கையால் முதலீட்டாளர்கள் ஆவலுடன் பங்குகளை வாங்கி குவித்ததால் சந்தை அதிகரித்து காணப்பட்டது. 
 
வழக்கமாக நிதிக்கொள்கை அறிக்கை சமர்ப்பித்த பிறகு காலை 11 மணிக்கே வட்டி விகித நிர்ணயம் பற்றிய அறிவிப்பு வெளியாகிவிடும். ஆனால், இந்த முறை உர்ஜித் படேல் தலைமையிலான 6 பேர் குழு ஆலோசனை மதியம் முடிவடைந்த பிறகு சுமார் 2.30க்கு வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
 
இன்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 91.26 புள்ளிகள் உயர்ந்து 28,334.55 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 31.05 புள்ளிகள் உயர்ந்து 8,769.15 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஓஎன்ஜிசி 273.55 5.11
கெயில் 402.45 4.30
டாடா ஸ்டீல் 391.15 2.17
டெக் மஹிந்திரா 428.70 1.90
பார்தி இன்ப்ராடெல் 369.20 1.78
 
விலை குறைந்த பங்குகள்
ஜீ எண்டர்டெயின் 563,30 -2,69
கோல் இந்தியா 321,10 -2,07
எம் அண்ட் எம் 1,415.35 -1,97
லார்சன் 1,449.15 -1,47
அம்புஜா சிமென்ட்ஸ் 256,15 -1,06
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ