Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் விலையில் அதிரடி சரிவு; சவரனுக்கு ரூ.600 குறைவு!

கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை குறைந்து வீழ்ச்சி ஏற்பட்டது. இன்றும் தங்கம் விலையில் சரிவு காணப்பட்டது. அதிரடியாக விலை வீழ்ச்சி ஏற்பட்டு சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.22,816க்கு வந்தது.
 
 
கடந்த 5 தினங்களில் மட்டும் கிராமுக்கு ரூ.118 குறைந்து உள்ளது. அதாவது சவரனுக்கு ரூ.944 வீழ்ச்சி ஏற்பட்டு ரூ.23 ஆயிரத்துக்கு கீழே இறங்கியது. இதே போல் வெள்ளி விலையிலும் சரிவு காணப்பட்டது. வெள்ளி விலை கிராம் ரூ46.10 ஆகவும். ஒரு கிலோ ரூ43,065 ஆகவும் இருந்தது. ஒரு கிலோவுக்கு வெள்ளி விலை ரூ.1895 குறைந்து உள்ளது.
 
ஆபரண தங்கத்தின் விலை கடந்த மே மாதத்தின் இறுதியில் வீழ்ச்சி ஏற்பட்டு ரூ.21,800-க்கு விற்பனையானது. ஆனால் ஜூன் மாதத்தில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது. அந்த மாதத்தின் 27ம் தேதி அதிகபட்சமாக ரூ.23,784க்கு விற்பனை செய்யப்பட்டது.
 
ஜூலை மாதத்திலும் இதே நிலையே நீடித்தது. அந்த மாதத்தின் கடைசி தினத்தில் பவுன் ரூ.24 ஆயிரத்தை தொட்டது. ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் தங்கம் விலை ரூ.23,504 ஆக குறைந்தது. கடந்த மாதத்தில் 8ம் தேதி தங்கம் விலை ரூ.24 ஆயிரத்தை நெருங்கியது. அதன் பிறகு விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது.
 
தங்கத்தைப் பொறுத்தவரை நேற்று மாலை கிராம் ரூ.2927 ஆகவும், பவுன் ரூ.23,416 ஆகவும் இருந்தது. இன்று காலை கிராமுக்கு ரூ.66 குறைந்தது ரூ.2861க்கும் பவுன் ரூ.528குறைந்து ரூ.22,888க்கும் விற்பனையானது.
 
மாலை நேர நிலவரப்படி சவரனுக்கு ரூ.600 சரிந்து ரூ.22,816க்கு விற்பனையானது.
 
22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.2,852
 
22 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.22,816
 
24 கேரட் தங்கம் 10 கிராம் - ரூ.30,500
 
வெள்ளி ஒரு கிராம் - ரூ.45.90
 
வெள்ளி ஒரு கிலோ - ரூ.42,930
 
சோ.கார்த்திகேயன்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close