Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதலீட்டாளர்கள் லாப நோக்கம்.. சந்தைகள் இறக்கம்!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (5.10.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்று பன்னாட்டு நிதியம் தெரிவித்து இருந்தது. இதன் தாக்கத்தினால் இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 143 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த மூன்று நாள் வர்த்தகத்தில் குறியீடு 507.02 புள்ளிகளாக அதிகரித்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 143.10 புள்ளிகள் உயர்ந்து 28,477.65 புள்ளிகளாக இருந்தது. உலோகம், ரியல் எஸ்டேட் மற்றும் வங்கித் துறை போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்து காணப்பட்டன. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 37.80 புள்ளிகள் அதிகரித்து 8,806.95 புள்ளிகளாக இருந்தது.
 
எனினும் சர்வதேச சந்தை பலவீனமாக வர்த்தகமாகி வந்ததாலும், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததாலும் இந்திய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி நிறைவடைந்தது. 
 
இன்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 113.57 புள்ளிகள் குறைந்து 28,220.98 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 25.20 புள்ளிகள் குறைந்து 8,743.95 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டாடா மோட்டார்ஸ் (டி) 359.40 2.97
அல்ட்ராடெக் சிமெண்ட் 4,033.15 2.02
பிபிசிஎல் 649.90 1.95
ஹிண்டால்கோ 157.25 1.94
பார்தி இன்ப்ராடெல் 376.25 1.91
 
விலை குறைந்த பங்குகள்
 
ஓஎன்ஜிசி 266,65 -2,52
ஆக்சிஸ் வங்கி 535,70 -1,99
ஐடியா செல்லுலார் 79,95 -1.54
பஜாஜ் ஆட்டோ 2,857.95 -1,25
ஹீரோ மோட்டோகார்ப் 3,491.25 -1,22
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ