Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

FIEO பொன் விழா : மத்திய அமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் அக்டோபர் 8 சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

 FIEO பொன் விழா : மத்திய அமைச்சர்  திருமதி. நிர்மலா சீத்தாராமன்  அக்டோபர் 8 சென்னையில் தொடங்கி  வைக்கிறார். 

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்  (தனிப் பொறுப்பு) திருமதி. நிர்மலா சீத்தாராமன், FIEO அமைப்பின் பொன் விழா கொண்டாட்டம் மற்றும்  விருது வழங்கும் விழாவை தொடங்கி வைக்கிறார். இதற்கான விழா சென்னை லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில்  அக்டோபர் 8 ம் தேதி நடக்கிறது.
 
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு ( Federation of Indian Export Organisations - FIEO - ஃபியோ  ), அதன் பொன் விழா & மண்டல ஏற்றுமதி விருதுகள் வழங்கும் விழா அக்டோபர் 8, 2016 அன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.  
 
மத்திய வர்த்தக அமைச்சத்தின் கீழ் உருவாக்கப்பட்ட FIEO அமைப்பு, இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு அளித்து வரும் சிறப்பான பங்களிப்பு வெளிப்படும் விதமாக இந்தப் பொன் விழா கொண்டாட்டம் அமைகிறது. 
 
இது குறித்து FIEO , தென் மண்டல சேர்மன் டாக்டர் A.சக்திவேல் கூறும் போது,''தென் மண்டல ஏற்றுமதியில் FIEO அமைப்பின் பங்களிப்பு 72 சதவிகிதமாக இருக்கிறது. இந்திய அளவிலான ஏற்றுமதியில் தென் மண்டலத்தின் பங்களிப்பு 23 சதவிகிதமாக இருக்கிறது. 2015-16 ம் ஆண்டில் தென் மண்டலம் மூலம் 60.13 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதி பங்களிப்பில் இரண்டாவது பெரிய மண்டலமாக விளங்கும் தென் மண்டலம்,  கைவினைப் பொருட்கள் முதல் விமானங்கள்  வரை பல விதமான பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. அந்நியச் செலாவணி (ஃபாரக்ஸ்) வருமானத்தில் முன்னணி பங்களிப்பாளராக உயர்வதற்கான உத்திகளை, ஏற்றுமதிக்கு உதவி செய்து வரும் தென் மாநில அரசுகளின் ஆதரவுடன் மேற்கொள்ள FIEO தென் மணடலம் திட்டமிட்டுள்ளது" -என்றார்
டாக்டர்  A.சக்திவேல். 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP