Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரிலையன்ஸ், ஹெச்டிஎப்சி பங்குகளால் சந்தை அதிகரிப்பு!

காலை 10.15 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (6.10.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
நேற்றைய வர்த்தகத்தில் சர்வதேச சந்தை பலவீனமாக வர்த்தகமாகி வந்ததாலும், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததாலும் இந்திய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்று காலை நேர வர்த்தகத்தில் ரிலையன்ஸ், ஹெச்டிஎப்சி, எல் & டி, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஐடிசி போன்ற முன்னணி நிறுவனத்தின் பங்குகள் விலை உயர்ந்து வருவதால் இந்திய பங்குச் சந்தை அதிகரித்து வருகிறது. 
 
இன்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 75.47 புள்ளிகள் உயர்ந்து 28,296.65 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 22.65 புள்ளிகள் உயர்ந்து 8,766.85 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பிபிசிஎல் 675.80 3.99
கெயில் 411.85 2.86
ஆரோபிந்தோ பார்மா 890.80 2.82
போஷ் 23,382.50 2.54
ரிலையன்ஸ் 1,115.55 2.40
 
விலை குறைந்த பங்குகள்
 
யெஸ் பேங்க் 1,253.55 -2,00
ஹெச்சிஎல் டெக் 799,80 -1,99
ஆக்சிஸ் வங்கி 529,40 -1,18
இன்போசிஸ் 1,034.05 -0,72
அல்ட்ராடெக் சிமெண்ட் 4,010.10 -0,57
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ