Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆட்டோ, ஐடி, பார்மா பங்குகளால் சரிந்தது சந்தை!

 மாலை 3.30 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (6.10.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

இன்று காலை நேர வர்த்தகத்தில் ரிலையன்ஸ், ஹெச்டிஎப்சி, எல் & டி, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஐடிசி போன்ற முன்னணி நிறுவனத்தின் பங்குகள் விலை உயர்ந்து வந்ததால் இந்திய பங்குச் சந்தை அதிகரித்து வந்தது. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 104 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 113.57 புள்ளிகளாக சரிந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 103.56 புள்ளிகள் உயர்ந்து 28,324.54 புள்ளிகளாக இருந்தது. எண்ணெய் மற்றும் எரிவாயு, மூலதன பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் சுகாதாரத் துறை போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்து காணப்பட்டன. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 24.75 புள்ளிகள் அதிகரித்து 8,768.70 புள்ளிகளாக இருந்தது. இந்த நிலையில் இன்று வர்த்தகத்தின் இடையே  வங்கி, ஆட்டோ, ஐடி மற்றும் பார்மா பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்பனை செய்ததால் சந்தை இறக்கத்தில் நிறைவடைந்துள்ளது.
 
இன்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 114.77 புள்ளிகள் குறைந்து 28,106.21 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 34.40 புள்ளிகள் குறைந்து 8,709.55 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
கெயில் 414.45 3.51
பிபிசிஎல் 670.70 3.20
கிராஸிம் 1,009.20 2.28
ரிலையன்ஸ் 1,110.80 1.96
ஹெச்யூஎல் 884.45 1.55
 
விலை குறைந்த பங்குகள்
 
பேங்க் ஆப் பரோடா 164,50 -2,92 
என்டிபிசி 148,95 -2,30
ஜீ எண்டர்டெயின் 554,90 -2,17
சிப்லா 578,80 -2,17
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 177,90 -1,93

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close