Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேலைவாய்ப்பு குறித்த எதிர்பார்ப்பால் தடுமாற்றத்தில் சந்தை!

காலை 10.15 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (7.10.16) காலை நேர வர்த்தகத்தில் ப்ளாட் ஆக வர்த்தகமாகி வருகிறது.
 
நேற்று காலை நேர வர்த்தகத்தில் ரிலையன்ஸ், ஹெச்டிஎப்சி, எல் & டி, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஐடிசி போன்ற முன்னணி நிறுவனத்தின் பங்குகள் விலை உயர்ந்து வந்ததால் இந்திய பங்குச் சந்தை அதிகரித்து வந்தது. ஆனால், வர்த்தகத்தின் இடையே வங்கி, ஆட்டோ, ஐடி மற்றும் பார்மா பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்பனை செய்ததால் சந்தை இறக்கத்தில் நிறைவடைந்துள்ளது.
 
இந்த நிலையில் இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சர்வதேச சந்தை பலவீனமாக வர்த்தகமாகி வருவதினால் இந்திய சந்தை ப்ளாட் ஆக வர்த்தகமாகி வருகிறது. இதுமட்டுமின்றி அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதால் ஆசிய சந்தைகளும் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறித்த டேட்டாவைப் பொறுத்து அந்நாட்டு மத்திய வங்கி அடுத்து நடைபெறும் நிதிக்கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதம் மாற்றி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் முதலீட்டாளர்கள் கவனத்துடன் வர்த்தகம் மேற்கொண்டு வருகின்றனர். 
 
இன்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 3.20 புள்ளிகள் குறைந்து 28,103.78 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 8.45 புள்ளிகள் குறைந்து 8,701.55 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஜீ எண்டர்டெயின் 563.55 1.56
ஆக்சிஸ் வங்கி 538.80 1.51
ஐடிசி 239.80 1.01
டாடா மோட்டார்ஸ் (டி) 356.25 0.91
எம்.எம் 1,385.05 0.88
 
விலை குறைந்த பங்குகள்
 
பார்தி இன்ப்ராடெல் 372,70 -2,26
பிபிசிஎல் 661,70 -1,34
ஹெச்டிஎப்சி 1,408.90 -1,20
பஜாஜ் ஆட்டோ 2,794.10 -1,03
அரவிந்தர் ஃபார்ம் 848,50 -0,97
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close