Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கூகுள் பிக்ஸல் மற்றும் பிக்ஸல் XL தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்

 
கூகுள் நிறுவனம் ஆப்பிள் ஐபோன்களுக்கு நிகரான ஸ்மார்ட்போன்களை வெளியிட முடிவு செய்து கூகுள் நிகழ்ச்சியில் வெளியிட்ட போன் மாடல்கள் தான் பிக்சல் மற்றும் பிக்சல் XL. பிக்ஸல்  5” அங்குல 1080p டிஸ்ப்ளேவும் மற்றும் 1920x1080 ரெசல்யூஷன் கொண்டது. அதேபோல் மற்றோரு மாடலான பிக்ஸல் XL மாடல் 5.5” அங்குல Quad-HD டிஸ்ப்ளேயுடனும் 2560x1440 ரெசலுஷன் கொண்டது. பிக்ஸல் 140 கிராம் எடையும் பிக்சல் XL 168 கிராம் எடையும் கொண்டுள்ளது.
 
 
பிக்ஸல் மற்றும் பிக்சல்  XL  ஆகிய இரண்டும் 4 ஜிபி ரேம் நினைவகத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Qualcomm நிறுவனத்தின் அதிவேகமான புதிய புராசஸரான Snapdragon 821 சிப்கள் இந்த இரண்டு மாடல்களிலும் பொருத்தப்பட்டுள்ளன. 
 
பிக்ஸல் மற்றும் பிக்ஸல்  XL  ஆகிய இரண்டும் 12.3 மெகாபிக்சல் பின்பக்க கேமராவும், 8 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது. இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து  நிறுவனங்களின் மொபைல் கேமராக்களிலேயே இந்த பிக்ஸல் போன்களே சிறந்தது என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
 
பிக்ஸல் 2770 mAH பேட்டரி திறனும், பிக்சல் XL 3450 mAH திறனும் கொண்டுள்ளது. இந்த இரண்டு மொபைல்களும் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 7 மணிநேரங்கள் பயன்படுத்தலாம் என்கிறது கூகுள். இந்த இரண்டு போன்களும் வெரி சில்வர், ரியல்லி ப்ளூ, கொய்ட் பிளாக் ஆகிய மூன்று நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
 
கூகுளின் பிரத்யேகமான பர்சனல் வாய்ஸ் அசிஸ்டன்ட் முதல்முறையாக இந்த மொபைல்களுடன் இணைத்து வெளியிடப்பட்டுள்ளது. இதுவும் ஆப்பிளின் சிறி அமைப்புக்கு டஃப் கொடுக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹெட்போன் ஜாக்கை எடுத்து வாடிக்கையாளர்களின் எதிர்ப்பை வாங்கிக்கொண்ட ஆப்பிள் நிறுவனம் செய்த தவறை கூகுள் செய்யவில்லை. ஆம் இந்த இரண்டு மொபைல்களிலும் 3.5mm ஹெட்போன் ஜாக் வழக்கம்போலவே உள்ளது. மொபைல்போன்களின் தகவல் பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமாகிவிட்ட இக்காலத்தில் இந்த இரண்டு மொபைல்களுமே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் வசதியை கொண்டுள்ளது.  
 
பிக்ஸல் மற்றும் பிக்சல் XL ஸ்மார்ட்போன்களை வாங்குபவர்களுக்கு அளவில்லாமல் தாங்கள் எடுக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை க்ளவுடில் இலவசமாக சேமித்துக்கொள்ளலாம். மேலும் 24X7 நேரமும் தொழில்நுட்ப உதவியை போன் மற்றும் மெசேஜ் மூலமாக  பெற முடியும்.
 
பிக்ஸல் மற்றும் பிக்சல் XL ஆகிய இரண்டு மாடல்களுக்கான முன்பதிவு இந்தியாவில் இம்மாதம் 13-ம் தேதி தொடங்குகிறது. 32GB, 128GB நினைவகம் உடைய பிக்சலின் தொடக்க விலையாக 649 டாலர்களும், அதே 32GB, 128GB நினைவகம் உடைய பிக்சல் XL 769 டாலர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்ஸல் போனின் விலை சுமார் 43,000-த்தில் இருந்து துவங்குகிறது.
 
ஜெ.சாய்ராம். (மாணவப் பத்திரிகையாளர்)
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ