Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ப்ளூ சிப் பங்குகளால் இறக்கத்தில் இந்திய சந்தை!

மாலை 3.30 மணி நிலவரம்
 
வாரத்தின் இறுதி நாளான இன்று (7.10.16) இந்திய பங்குச் சந்தைகள் மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
 
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சர்வதேச சந்தை பலவீனமாக வர்த்தகமாகி வந்ததினால் இந்திய சந்தை ப்ளாட் ஆக வர்த்தகமாகி வந்தது. இதுமட்டுமின்றி அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளதால் ஆசிய சந்தைகளும் இறக்கத்தில் வர்த்தகமாகி வந்தன.
 
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறித்த டேட்டாவைப் பொறுத்து அந்நாட்டு மத்திய வங்கி அடுத்து நடைபெறும் நிதிக்கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதம் மாற்றி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் முதலீட்டாளர்கள் கவனத்துடன் வர்த்தகம் மேற்கொண்டனர். இதன் காரணமாகவும், முதலீட்டாளர்கள் ப்ளூ சிப் நிறுவன பங்குகளை விற்பனை செய்த காரணத்தினாலும் இந்திய பங்குச் சந்தை இறக்கத்தில் முடிவடைந்துள்ளது.
 
இன்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 45.07 புள்ளிகள் குறைந்து 28,061.14 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 11.95 புள்ளிகள் குறைந்து 8,697.60 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டாடா ஸ்டீல் 406.55 4.28
டாடா மோட்டார்ஸ் (டி) 366.15 3.71
ஜீ எண்டர்டெயின் 572.20 3.12
டாடா மோட்டார்ஸ் 565.70 2.58
பஜாஜ் ஆட்டோ 2,883.50 2.14
 
விலை குறைந்த பங்குகள்
 
பார்தி இன்ப்ராடெல் 370,90 -2,73
ஏஷியன் பெயின்ட்ஸ் 1,184.60 -2,06
எய்கர் மோட்டார்ஸின் 25,810.45 -1,64
ஹெச்டிஎப்சி 1,403.70 -1,56
சிப்லா 570,05 -1,51
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ