Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி டிரேடிங்- கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி !

கமாடிட்டி டிரேடிங்

கச்சா எண்ணெய்!
 
கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய் ஏற்றத்தில் வர்த்தகமானது. திங்கள்கிழமை அன்று 48 டாலர் என்ற நிலையில் இருந்த பேரல் கச்சா எண்ணெய் தற்போது 50 டாலரைத் தாண்டி வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.
 
இது கடந்த மூன்று மாதங்களில் இல்லாத உச்சம். எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைப்பதாக செய்துகொண்ட ஒப்புதல்படி, தங்களது உற்பத்தியைப் பெரும்பாலும் குறைத்துள்ளன. இதனால் சந்தையில் தேவைக்கு அதிகமான வரத்து தடுக்கப்பட்டிருக்கிறது.
 
இதனால் கடந்த வாரத்துக்கு முந்தைய வாரமே கச்சா எண்ணெய் நன்றாக ஏற்றமடைந்தது. அப்போது ரெசிஸ்டன்ஸாக இருந்த 46 டாலரை உடைத்து ஏறினால், 50 டாலர் வரை உயரலாம் என்று கணிக்கப்பட்டது.
 
அதன்படி தற்போது 50 டாலரைத் தாண்டி வர்த்தகமாகிறது. எம்சிஎக்ஸ் சந்தையில் ஃப்யூச்சர்ஸ் கான்ட்ராக்ட்டுகள் 4.7 சதவிகிதம் உயர்ந்து ரூ.3,150-க்கு வர்த்தகமானது. 
 
 
 
தங்கம்!
 
முந்தைய வாரத்தைத் தொடர்ந்து கடந்த வாரத்திலும் தங்கள் விலை கடும் இறக்கத்தைச் சந்தித்தது. வார தொடக்கத்தில் அவுன்ஸ் தங்கம் 1,315 டாலர் என்ற நிலையில் இருந்தது. செவ்வாய் அன்று கடும் சரிவைச் சந்தித்து ஒரு அவுன்ஸ் தங்கம் 1,270 டாலருக்கு இறங்கியது.
 
பிறகு மேலும் இறங்கி வெள்ளி அன்று ஒரு அவுன்ஸ் தங்கம் 1,250 டாலருக்கு வர்த்தகமானது. கிட்டதட்ட கடந்த வாரத்தில் 5 சதவிகித வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது தங்கம். 2015 நவம்பருக்குப் பிறகு அதிக சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் அனைவரும் பதற்றத்துக்கு ஆளாகியுள்ளனர்.
 
இந்தச் சரிவுக்குக் காரணம், அமெரிக்கா தனது வட்டி விகிதத்தை உயர்த்தும் என்கிற எதிர்பார்ப்புதான். ஏற்கெனவே தங்கத்துக்கான தேவை பெருமளவில் அதிகரிக்காத நிலையில் தொடர்ந்து சரிந்து வருவது முதலீட்டாளர்களிடையே அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. 
 
வெள்ளி!
 
தங்கத்தைப் போலவே வெள்ளியும் கடந்த வாரத்தில் சரிவைச் சந்தித்துள்ளது. வாரத் தொடக்கத்தில் 19.14 டாலர் என்ற நிலையில் இருந்த ஒரு அவுன்ஸ் வெள்ளி, தற்போது 17 டாலருக்குக் குறைந்துள்ளது. விழாக்கால நேரம் என்றாலும்கூட தங்கம், வெள்ளி போன்றவற்றுக்கான தேவை குறைந்தே காணப்படுகிறது.
 
இந்த நிலையில், சர்வதேச அளவில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான ட்ரெண்ட் நெகட்டிவ்-ஆக மாறியிருக்கிறது.
- ஜெ.சரவணன்
 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ