Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி மென்தா ஆயில், சோயாபீன், மஞ்சள், ஜீரகம்..!

கமாடிட்டி டிரேடிங்! 
அக்ரி கமாடிட்டி 
 
மென்தா ஆயில்! 
 
எம்சிஎக்ஸ் சந்தையில் மென்தா ஆயில் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உள்நாட்டுச் சந்தையில் முக்கிய தொழில் நிறுவனங்களில் மென்தா ஆயிலின் தேவை அதிகரித்துள்ளதே
இதற்கு காரணம்.
 
இது மட்டுமின்றி, மென்தா ஆயில் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் இருந்து விநியோகம் குறைந்த அளவிலேயே இருப்பதால் விலை ஏற்றம் காணப்படுகிறது.
 
மென்தா ஆயிலைப் பொறுத்தவரை, இந்த வாரம் 847 முதல் 877.8 வரை வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
சோயாபீன்! 
 
சோயாபீன்ஸ் உற்பத்தி செய்யும் பகுதிகளில் பயிர் சேதமடைந்ததாக வெளியான தகவலால் என்சிடிஇஎக்ஸ் சந்தையில் சோயாபீன் விலை அதிகரித்துக் காணப்பட்டது.
 
இதனை அடுத்து சோயாபீன் லாப நோக்கில் விற்பனை செய்யப்பட்டதால், இதன் விலை இறக்கத்தைச் சந்தித்தது. குறைந்த அளவு தேவையின் காரணமாக முந்தைய நிதி ஆண்டை ஒப்பிடும்போது, 2015-16-ம் நிதி ஆண்டில் சோயாமீல் ஏற்றுமதி 65% சரிவடைந்துள்ளது.
 
சோயாபீனைப் பொறுத்தவரை, இந்த வாரம் 3,216 முதல் 3,280 வரை வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
மஞ்சள்! 
 
மஞ்சள் பயிர் பரப்பளவு அதிகரித்துள்ள சூழல் காரணமாக என்சிடிஇஎக்ஸ் சந்தையில் இதன் விலை 7,102 வரை விலை குறைந்தது.
 
இது மட்டுமின்றி, மஞ்சள் உற்பத்தி செய்யப்படும் மாநிலங்களில், அக்டோபர் மாதத்தின் இரண்டாவது பாதியில் வறண்ட வானிலையாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது மஞ்சள் பயிருக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
என்சிடிஇஎக்ஸ் அங்கீகாரம் பெற்ற கிடங்கில் மஞ்சள் கையிருப்பு 115 டன் சரிந்து, 5,141 டன்னாக குறைந்துவிட்டது. மஞ்சள் விலையைப் பொறுத்தவரை, இந்த வாரம் 6,968 முதல் 7,192 வரை வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஜீரகம்!
ஜீரகம் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளிலிருந்து இதன் விநியோகம் குறைந்த அளவிலேயே இருப்பதால், இதன் விலை அதிகரித்துக் காணப்பட்டது.
 
தற்போது இருக்கும் கையிருப்பு குறைந்து வருகிறது. ஆனால், அடுத்த பருவத்தில் சீரகம் விநியோகம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இதன் விலை மேலும் அதிகரிக்காமல் இருக்கிறது.
 
என்சிடிஇஎக்ஸ் அங்கீகாரம் பெற்ற கிடங்கில் சீரகம் கையிருப்பு 111 டன் சரிந்து 3,420 டன்னாக குறைந்துவிட்டது. சீரகத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் 16,700 முதல் 17,370 வரை வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
மஞ்சள்
கடந்த வாரத்தில் மஞ்சள் பெரும்பாலும் இறக்கத்திலேயே வர்த்தகமானது. சந்தையில் மஞ்சளுக்கான தேவை அதிகரித்து காணப்படாத நிலையில், வரத்து அதிகமாக உள்ளது. இதன் காரணமாக மஞ்சள் விலை குறைந்தது. ஆனால், வரும் வாரங்களில் மஞ்சள் மீண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், தெலங்கானா, மகாராஷ்ட்ரா பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், உற்பத்தி பாதிப்படைய வாய்ப்புள்ளது. மேலும், விழாக்காலம் என்பதால் மஞ்சளுக்கான தேவை அதிகரிக்கும். இதனால் வரும் வாரங்களில் மஞ்சள் விலை உயர்ந்து வர்த்தகமாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
 
- சோ.கார்த்திகேயன்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ