Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆர்பிஐ வட்டி குறைப்பு எதிரொலி: வங்கிகள் கடனுக்கான வட்டியை குறைக்க தொடங்கின

கடன் வட்டியை குறைக்க தொடங்கின வங்கிகள்..

பாரத ரிசர்வ் வங்கி, அண்மையில் குறுகிய கால கடனுக்கான ரெபோ  வட்டி விகிதத்தை 0.25% குறைத்திருக்கிறது . 6.5 சதவிகிதமாக இருந்த ரெபோ விகிதத்தை 6.25 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இப்படி ஆர்பிஐ வட்டியை குறைத்தாலும் பல வங்கிகள் கடனுக்கான வட்டியை குறைக்காமல் இருந்தன. இதனால், ஆர்பிஐ வட்டியை குறைத்தால் வங்கிகள் வட்டியை குறைக்க வேண்டும் என முந்தைய ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் பல முறை சொல்லி இருக்கிறார்.

அண்மையில் இந்தக் கருத்தை புதிய ஆர்பிஐ கவர்னர் உர்ஜித்-ம் வலியுற்றுத்தினார். இதனை அடுத்து பல வங்கிகள் கடனுக்கான வட்டியை குறைந்துள்ளன.

எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், சிண்டிகேட் பேங்க், பஞ்சாப் அண்ட் சிந்த் பேங்க், கோட்டக் மஹிந்திரா பேங்க், ஓரியன்டல் பேங்க் ஆஃப் பேங்க், யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா போன்றவை 0.05 முதல் 0.15 சதவிகிதம் வரை வட்டியை குறைத்துள்ளன.

இவை ஃப்ளோட்டிங் விகிதத்தில் வழங்கப்பட்ட வீட்டுக் கடன், கார் கடன் போன்றவற்றுக்கான வட்டியை குறைத்துள்ளன.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close