Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜிஎஸ்டி : 2017 ஏப்ரல் 1 அமலுக்கு கொண்டு வந்து விடுவோம் -நிதி மந்திரி அருண் ஜேட்லி

 ஜிஎஸ்டி : 2017 ஏப்ரல் 1 அமலுக்கு கொண்டு வந்து விடுவோம்  -நிதி மந்திரி அருண் ஜேட்லி


ஜி.எஸ்.டி. வரி வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அதை 2017 ஏப்ரல் 1 ம் தேதி அமலுக்கு கொண்டு வந்து விடுவோம் என்று நிதி மந்திரி அருண் ஜேட்லி கூறினார்.

பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டங்களில் பங்கேற்பதற்காக, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஈரான், வங்காளதேசம், பூடான், இலங்கை ஆகிய நாடுகளின் நிதி மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 

 அவர் வாஷிங்டனில் இந்திய பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
;;இந்தியா அடுத்த 2 ஆண்டுகளில் 7.6 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று பன்னாட்டு நிதியமும், உலக வங்கியும் கணித்துள்ளன.
 

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, நாம் சிறப்பாகவே செயல்படுகிறோம். ஆனால், இது போதாது. இன்னும் சிறப்பாக செயல்பட நம்மால் முடியும்.
 

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), வளர்ச்சிக்கு மேலும் வழிவகுக்கும். அது வர்த்தகத்தை எளிமை ஆக்கும்.
 

ஜிஎஸ்டி விகிதம் எவ்வளவு என்பது குறித்து அக்டோபர் 18, 19 மற்றும் 20 ம் தேதிகளில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம்.


ஜி.எஸ்.டி. வரியை ஏப்ரல் 1 ம் தேதி முதல் அமல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.' என்றார்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ