Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொடர்ந்து இரண்டாவது மாதமாகச் சரிந்தது தொழில் துறை உற்பத்தி!

நம் நாட்டின் தொழில் துறை உற்பத்தி தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஆகஸ்ட் மாதத்தில் சரிவடைந்துள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தகவலின் மூலம் தெரியவந்துள்ளது. 
 
 
தொழில் துறையைப் பொறுத்தவரை உற்பத்தி மீட்பு நடவடிக்கையில் சந்தேகம் மற்றும் கடந்த வாரம் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதம் குறைப்பு போன்ற நடவடிக்கையால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொழில் துறை உற்பத்தி குறியீடு தொடர்ந்து இரண்டாவது மாதமாக சரிவடைந்துள்ளது. 
 
எனினும், நல்ல பருவமழையால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை மற்றும் பண்டிகை நாட்களால் நுகர்வோர் சாதனங்கள் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு (ஐஐபி) 0.7 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது ஜூலை மாதத்தில் 2.5 சதவிகிதம் என்ற அளவில் இருந்ததாக மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ