Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்களுக்காக உழைத்திடும் பிஎஃப் பணம்.. கவனிக்க வேண்டிய 12 விஷயங்கள்!

மாதச் சம்பளம் வாங்கும் பலருக்கும் தங்களது சம்பளத்தில் பிடித்தம் போக எவ்வளவு கையில் கிடைக்கும் என்பது தெரிகிறது. அதில் என்ன என்ன பிடித்தம் செய்கிறார்கள்? எதற்கு பிடிக்கிறார்கள் என்பதே தெரியாமல் பலர் இருக்கின்றனர்.
 
 
வருமான வரிக்காக பிடிக்கிறார்களா? அல்லது வருங்கால வைப்பு நிதிக்காக (பிஎஃப்) பிடிக்கிறார்களா? என்பதைகூட அறிந்து கொள்ள மாட்டார்கள். பிஎஃப் பணம் பிடிக்கிறார்கள் என்று தெரிந்தாலும் எவ்வளவு பிடிக்கிறார்கள்? என்பது தெரிந்து கொள்ளாமல் இருப்பார்கள். தவிர தங்களது பிஎஃப் கணக்கில் இதுவரை எவ்வளவு தொகை இருக்கிறது? அதன் பலன் என்ன? என்பது குறித்து விவரங்களும் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கின்றனர்.
 
பிஎஃப் குறித்து தொழிலாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 
 
1. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சட்டத்தின் கீழ் கொண்டுவரப் பட்டுள்ள அனைத்து நிறுவனங்களிலும் ரூ.6,500 வரை மாத ஊதியம் பெறும் தொழிலாளர்கள், வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் ஈட்டுறுதி காப்பீட்டு திட்டங்களில் உறுப்பினராகும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. 
 
2. ஒவ்வொரு ஆண்டின் வருங்கால வைப்பு நிதி கணக்கு அறிக்கையை அடுத்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதிக்குள் பெறலாம்.
 
3. கணக்கு முடிப்பு படிவங்களை அனைத்து  வருங்கால வைப்பு நிதி அலுவலங்களிலிருந்தும் இலவசமாக பெறலாம். 
 
4. படிவங்களை பூர்த்தி செய்வதற்கு மக்கள் தொடர்பு அதிகாரியின் உதவியை நாடலாம். 
 
5. கணக்கு முடிப்பு படிவங்களை அனைத்து வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திலும் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். 
 
6. குறிப்பிட்ட காரணங்களுக்காக நிதியிலிருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகையை 30 நாட்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம். 
 
7. கணக்கு முடிப்பு தொகையை படிவம் சமர்பித்த 30 நாட்களுக்குள் பெறலாம்.
 
8. கணக்கு நிலுவையிலுள்ள தொகையை பணி மாற்றத்திற்கு பின் துவங்கப்பட்டுள்ள கணக்கிற்கு பணி மாற்ற தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் மாற்றிக் கொள்ளலாம். 
 
9. வருங்கால வைப்பு நிதி / ஓய்வூதிய தொகையை பெறுவதற்கான நியமனதாரரை நியமிக்கலாம். 
 
10. குறைகளை பதிவு செய்து தீர்வைப் பெறலாம்.
 
11. எந்த அலுவலகத்தினுடைய பொறுப்பு அதிகாரியையும் குறை தீர்ப்பின் பொருட்டு முன் அனுமதி  இன்றி சந்திக்கலாம். 
 
12. சந்தா தொகையை தொழில் நிறுவனர் செலுத்தாத போதிலும் மாத ஓய்வூதியத்தை பெறுவதற்கான உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
 
- சோ.கார்த்திகேயன் 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ