Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதலீட்டில் ரிஸ்க் குறைக்க - லைஃப் சைக்கிள் இன்வெஸ்டிங்...!

து என்ன  லைஃப் சைக்கிள் இன்வெஸ்டிங் (life-cycle investing)  என்கிறீர்களா?
 

 

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். இது முதலீட்டுக்கும் 100 சதவிகிதம் பொருந்தும்.

 

சிறு வயதிலே உங்களின் வாழ்க்கை சுழற்சிக்கு ஏற்ப முதலீடு செய்ய பழகிவிட்டீர்கள் என்றால் அது நிச்சயம் உங்களின் ஓய்வு காலம் ஒளி மயமாக இருக்க உதவும்.  

 

லைஃப் சைக்கிள் இன்வெஸ்டிங்-ல் இளம் வயதாக இருக்கும் போது முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டும். அதாவது,  அப்போது பங்குச் சந்தையில் உங்களின் முதலீடு அதிகமாக இருக்க வேண்டும். வயதாக வயதாக முதலீட்டில் பங்குச் சார்ந்த முதலீடுகளின் அளவு குறைந்து கொண்டே வர வேண்டும்.
 
பங்குச் சந்தையில் மூலதனத்தை இழப்பதற்கு அதிக வாய்ப்பு இருந்தாலும், இளம் வயதில் அதில் அதிகம் முதலீடு செய்யச் சொல்வதற்கு முக்கிய காரணம். இளம் வயதில் முதலீட்டு இழப்பை தாங்கும் சக்தி அதிகம் இருக்கும் என்பதோடு, பங்கின் விலை குறைந்தால், முதலீட்டாளருக்கு இளம் வயது என்பதால் அது மீண்டும்  அதிகரிக்கும் போது விற்று லாபம் பார்க்கும்  வாய்ப்பு கிடைக்கும். இந்தக் காரணத்துக்காகதான் இளம் வயதில் பங்குச் சார்ந்த திட்டங்களில் அதிக முதலீடு செய்ய அறிவுறுத்தப்பப்படுகிறது.

 

உங்களின் வயது அரை சதத்தை அதாவது 50-ஐ தாண்டும் போது ரிஸ்க்கான முதலீடுகளில் இருந்து, படிப்படியாக முதலீட்டை ரிஸ்க் குறைந்த பேலன்ஸ்ட் ஃபண்டுகள், கடன் ஃபண்ட்கள், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு குறைத்துக் கொள்ள வேண்டும் அல்லது மாற்றிக் கொள்ள வேண்டும்.

 

பணி ஓய்வு பெற்றுவீட்டீர்கள் அல்லது 60 வயதை தாண்டி விட்டீர்கள் என்றால் ரிஸ்க்கான நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளிலிருந்து வெளியேறி மூலதனத்துக்கு உத்தரவாதமான முதலீட்டு திட்டங்களுக்கு (கடன் ஃபண்ட்கள், ஃபிக்ஸட் டெபாசிட்கள்) முதலீட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். 

 

நீங்கள் எப்போது சம்பாதிப்பதை நிறுத்துகிறீர்களோ, அப்போது முதலீட்டில் ரிஸ்க் எடுப்பதை நிறுத்திவிட வேண்டும். அப்போதுதான் ஓய்வுக் காலம் ஒளிமயமாக இருக்கும்.

 

- சேனா சரவணன்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close