Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்வதேச சந்தையால் அதிகரிக்கும் இந்திய சந்தை!

காலை 10.15 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (14.10.16) காலை நேர வர்த்தகத்தில் அதிகரித்து காணப்படுகிறது. 
 
நேற்றைய இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை சரிவைச் சந்தித்தது. அமெரிக்க மத்திய வங்கி அடுத்த கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பு, கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் ஒபெக்  உறுப்பு நாடுகளிடையே உறுதியான நிலைப்பாடு வராத காரணத்தினால் கச்சா எண்ணெய் விலை சந்தித்து வரும் இறக்கம், சீனாவில் இருந்து வெளியான ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தமான டேட்டா எதிர்பார்ப்புக்கு மீறி சரிவு மற்றும் எப்ஐஐ சந்தையில் அதிகளவில் பங்குகளை விற்பனை போன்ற காரணங்களால் கடும் சரிவைச் சந்தித்தது. 
 
இந்த நிலையில் இன்றைய இந்திய பங்குச் சந்தை காலை நேர வர்த்தக தொடக்கத்தில் பாசிட்டிவ் ஆக வர்த்தகமாகத் தொடங்கியது. இதற்கு காரணம் சர்வதேச சந்தை சாதகமாக வர்த்தகமாகி வருவதாலும், செப்டம்பர் சிபிஐ டேட்டா சப்போர்ட் ஆக இருந்த காரணத்தினாலும் சந்தை அதிகரித்து காணப்பட்டது. 
 
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 39.68 புள்ளிகள் உயர்ந்து 27,681.30 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 11.40 புள்ளிகள் உயர்ந்து 8,583.25 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
கெயில் 423.20 2.30
ஓஎன்ஜிசி 277.20 1.63
லார்சன் 1,460.95 1.57
ரிலையன்ஸ் 1,073.25 1.52
எஸ்பிஐ 253.00 1.34
 
விலை குறைந்த பங்குகள்
 
ஹெச்யூஎல் 838,05 -2,78
ஜீ எண்டர்டெயின் 532,10 -2,64
இன்போசிஸ் 1,028.00 -2,31
லூபின் 1,458.05 -1,43
எய்கர் மோட்டார்ஸின் 25,470.25 -1,29
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ