Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எதிர்பார்ப்புகளை மிஞ்சி லாபம் சம்பாதித்த இன்போசிஸ்!

நம் நாட்டின் இரண்டாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் நிகர லாபம் ரூ.3,606 கோடியாக அதிகரித்துள்ளது.
 
 
கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் எதிர்பார்ப்புகளை மிஞ்சி 4.9 சதவிகிதம் உயர்ந்து ரூ.3,606 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.17,310 கோடியாக உயர்ந்துள்ளது. இது இதற்கு முந்தைய ஜூன் காலாண்டில்  ரூ.16,782 கோடியாக இருந்தது. 
 
நடப்பு 2016-17ம் நிதி ஆண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் 8 முதல் 9 சதவிகிதமாக குறையும் என்று அந்நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இதற்கு முந்தைய மதிப்பீட்டின்படி, 10.5 முதல் 12 சதவிகிதம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
 
இன்ஃபோஸிஸ் முக்கிய ஊழியர்களின் ஊதியத்தை மாற்றியமைத்திருக்கிறது. தனது பங்குகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையடுத்து முதன்மை ஆப்பிரேட்டிங் அதிகாரி பிரவீன் ராவ், முதன்மை நிதி அதிகாரி ரங்கநாத் உள்பட பலரது ஊதியம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களது செயல்பாட்டின் அடிப்படையிலும் ஊதியம் திருத்தப்பட்டுள்ளது.பிரவீன் ராவுக்கு ஊதியம் மற்றும் இதரத் தொகைகள் எல்லாம் சேர்த்து ஆண்டுக்கு ரூ. 8 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ