Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அன்று 10 லட்சம் இன்று 6.6 கோடி ரூபாய்

 
யூடிஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம் - இந்தியாவின் முதல் பங்குச் சந்தை சார்ந்த (ஈக்விட்டி) ஃபண்ட். இது கடந்த 1986ம் ஆண்டு தொடங்கப்பட்டு 30 ஆண்டை கடந்திருக்கிறது.  
 
கடந்த 30 ஆண்டுகளில் சந்தை எப்படிப்பட்ட விலை ஏற்ற இறக்கத்தில் இருந்த போதிலும், 
குறிப்பாக 2000 - 2004 ஆண்டுகளில் இந்த ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்டுகளை வழங்கி இருக்கிறது அதோடு பல நேரங்களில் போனஸ் மற்றும் ரைட்ஸ் யூனிட்களையும் முதலீட்டாளர்களுக்கு வழங்கி இருக்கிறது. 
 
 
ஓபன் எண்டெட் ஈக்விட்டி ஃபண்ட் ஆன இதில் ஆகஸ்ட் 31, 2016 நிலவரப்படி, ரூ. 3,444 கோடி நிர்வகிக்கப்படுகிறது. 5.09 லட்சம் பேர் முதலீடு செய்திருக்கிறார்கள். ஃபண்ட் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து, தற்போது வரை 1,230%, அதாவது ரூ. 2,477 கோடி டிவிடெண்டாக கொடுத்திருக்கிறார்கள்.
 
யூ டிஐ மார்க்கெட்ஷேர் ஃபண்ட், லார்ஜ் கேப் பங்குகளில் அதிகம் முதலீடு செய்யக் கூடியது.  ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்ஃபோசிஸ், ஆக்ஸிஸ் பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அல்ட்ராடெக் சிமென்ட், மாருதி சுஸிகி, ஏஷியன் பெயின்ட்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, இண்டஸ்இந்த் பேங்க், எல் & டி போன்ற  பங்குகள் இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் இடம் பிடித்திருக்கின்றன. 
 
''அவ்வப்போது, காலத்திற்கு தகுந்தாற் போல சரியான துறைகள் மற்றும் பங்குகளை கண்டுபிடித்து, ஃபண்டின் போர்ட்ஃபோலியோவை மறு கட்டமைக்கவும் செய்து வருகிறோம் " என்று யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட் துணைத் தலைவர் மற்றும் ஃபண்ட் மேனேஜர் சுவாதி குல்கர்னி தெரிவித்திருக்கிறார்.
 
இந்த ஃபண்ட் கடந்த 30 ஆண்டுகளில்  ஆண்டுக்கு 15.14 சதவிகிதம் கொடுத்திருக்கிறது. இதே கால கட்டத்தில் அதன் பெஞ்ச்மார்க் இன்டெக்ஸ் 13.73 சதவிகித வருமானத்தை கொடுத்திருக்கிறது. உதாரணமாக இந்த ஃபண்ட்டை தொடங்கிய போது 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் அது சுமாராக 6.6 கோடி ரூபாயாக (ரைட்ஸ், போனஸ், டிவிடெண்ட் போன்றவைகளை சேர்த்து) பெருகி இருக்கும். அதாவது கடந்த 30 வருடத்தில் 66 மடங்கு வருமானத்தை கொடுத்திருக்கிறது. 
 
10 லட்ச ரூபாயை பி.பி.எஃப்-ல் முதலீடு செய்திருந்தால் 1.58 கோடியாகவும் தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் 1.54 கோடியாகவும் எஃப்.டியில் முதலீடு செய்திருந்தால் 1.74 கோடியாகவும்தான் அதிகரித்திருக்கும். அவ்வளவு ஏன் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 30-ல் முதலீடு செய்திருந்தால் ரூ. 4.88 கோடியாகதான் பெருகி இருக்கும்.  
 
நீண்ட காலத்தில் ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து, நிலையான வளர்ச்சி அடைய வேண்டும் அதே நேரத்தில் தொடர்ந்து டிவிடெண்டையும் எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு இந்த ஃபண்ட் உகந்ததாக இருக்கும். 
 
மு.சா.கெளதமன்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ